பக்கம் எண் :

985
 

பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்

பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்

நீடு மாடங்கள் மாளிகை தோறு

நிலவு தென்றிரு நின்றியூ ரானே.

7

********8, 9, 10

திருச்சிற்றம்பலம்


அழகுடையராய் இராநின்றார்' எனச் சிறப்பிக்கின்றாராதலின், இல்பொருள் உவமையாக. 'அழகுடைய பேடை மயில்' என்றல் திருவுள்ளம் என்க.

இஃது, ஐராவதத்திற்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச் செய்தது.

இத்திருப்பதிகத்தின் ஏனைய திருப்பாடல்களை நாம் பெறேமாயினேம்.

8, 9, 10. **********

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கிறைஞ்சி
ஒன்றியஅன் புள்ளுருகப் பாடுவார் உடையஅரசு
என்றும் உலகிடர்நீங்கப் பாடியவே ழெழுநூறும்
அன்று சிறப்பித் தஞ்சொற் றிருப்பதிகம் அருள்செய்தார்.

-தி. 12 சேக்கிழார்