பக்கம் எண் :

99
 

அடைந்து சிவயோக நிட்டையில் அழுந்திநிற்கும் நிலையைப் பரையின் வரலாறு என்பர். பராசக்தியின் வியாபகத்தில் அழுந்தி நிட்டை கூடிய நிலை கை கூடுவதற்காகப் பஞ்சாக்கரத்தை ஓதும் நெறியில் ஓதிச் 'சிவோகம் பாவனை' புரியும் அநுபூதி நிலையே அஞ்செழுத்துண்மை யாகும். பழம் பஞ்சுரத்தில் அமைந்த திருப்பாண்டிக் கொடுமுடித் திருப்பதிகம் இப்பொருள் அமைதி உடையது.

நான்மறக்கினும் என் நா பஞ்சாக்கரமே 'சொல்லும்' என்று தம் உறுதி உரைக்கின்றார் அடிகள். நற்றவன், நட்டவன், நாவலன், வல்லவன், நஞ்சணி கண்டன், சேடன், விரும்பன், நம்பன் காரணன் என்னும் தொடர்களால் இறைவனை யழைக்கின்றார். இதனுள்,

"...............நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;...........
.................இனிப்பிறவாத தன்மை வந்து எய்தினேன்"

(தி. 7 ப. 48 பா. 1)

எனவரும் பகுதி சிவோகம் பாவனையாகிய அநுபூதி நிலையை விளக்குதல் காணலாம். இருவினை யொப்பு எய்திய சிறப்பை,

"......விரும்பி நின்மலர்ப் பாதமே நினைத்தேன்;...
........வினைகளும் விண்டனன்"


(தி. 7 ப. 48 பா. 7)

என்று புலப்படுத்துகின்றார் அடிகள்.

கோயிற்றிறம்:

இவ்வாறு அநுபூதி நிலை பெற்ற உயிர் சில சமயங்களில் தன் அறிவு புறத்தே சென்றால். அதனைத் தன் வயப்படுத்த திருக்கோயில்கள் தோறும் சென்று இறைவனை வழிபடுவது, வழிபட்டு மனமொழி மெய்களை இறைவனின் திருவருளில் சேர்ப்பது, கோயிற்றிறத்தின்கட் கூறப்படும். "காட்டூர்க்கடலே" என்று தொடங்கும் ஊர்த்தொகைப் பதிகம் இதனுள் அடங்குவதாகும். இதனுள் பல தலங்களையும், ஆங்காங்கு எழுந்தருளியுள்ள இறைவனைத் தம் பேரன்பு தோன்ற விளித்து வழிபடும் இயல்பைக் காணலாம்.

காட்டூரின்கண் எழுந்தருளியுள்ள இறைவன் முதலாக, கடவூரில் எழுந்தருளியுள்ள பிரான் ஈறாகப் பல சிவதலங்கள் இதனுள் கூறப்பெற்றுள்ளன. கடல், மலை, கொழுந்து, அரசு, ஏறு, தலைவன்,