பக்கம் எண் :

திருவாசகம்
100


20. ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்

25. துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்

30. கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்
தெய்த்திடை வருந்த எழுந்து புடைவரந்
தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்

35. கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்
பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி யென்னும் பல்கடல் பிழைத்தும்

40. நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும்
புல்வரம் பாகிய பல்துறை பிழைத்தும்

பதப்பொருள் : யானை முதலா - யானை முதலாக, எறும்பு ஈய ஆய - எறும்பு இறுதியாகிய, ஊனம் இல் யோனியின் உள் வினை பிழைத்தும் - குறைவில்லாத கருப்பைகளினின்றும் உள்ள நல்வினையால் தப்பியும், மானுடப் பிறப்பினுள் - மனிதப் பிறப்பில், மாதா உதரத்து - தாயின் வயிற்றில் (கருவுறும்பொழுது), ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் - அதனை அழித்தற்குச் செய்யும் குறைவில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும், ஒரு மதி தான்றியின் இருமையில் பிழைத்தும் - முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுள்ள கரு இரண்டாகப் பிளவுபடுவதனின்றும் தப்பியும், இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் - இரண்டாம் மாதத்தில் விளைகின்ற விளைவினால் உருக்கெடுவதனின்று தப்பியும், மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் - மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர்ப் பெருக்குக்குத் தப்பியும், ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் - நான்காம் மாதத்தில் அம்மத நீர் நிறைவினால் உண்டாகும் பெரிய இருளுக்குத் தப்பியும், அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் - ஐந்தாம் மாதத்தில் உயிர் பெறாது இறத்தலினின்று தப்பியும், ஆறு திங்களில் ஊறு அலர்