பக்கம் எண் :

திருவாசகம்
101


பிழைத்தும் - ஆறாம் மாதத்தில் கருப்பையில் தினவு மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்று தப்பியும், ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும் - ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும், எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் - எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்று தப்பியும், ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் - ஒன்பதாவது மாதத்தில் வெளிப்பட முயல்வதனால் வருந்துன்பத்தினின்று தப்பியும், தக்க தசமதி - குழவி வெளிப்படுதற்குத் தகுதியாகிய பத்தாவது மாதத்திலே தாயொடு தான்படும் - (தான் வெளிப்படுங்கால்) தாய் படுகின்றதனோடு தான் படுகின்ற, துக்க சாகரத் துயர்இடைப் பிழைத்தும் - கடல் போன்ற துன்பத்தோடு துயரத்தினின்று தப்பியும், அடைந்த அக்காலை - பூமியிற்பிறந்த பின்பு, ஆண்டுகள்தோறும் - வளர்ச்சியடையும் வருடங்கள்தோறும், ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் - தாய்தந்தையர் முதலியோர் நெருங்கியும் அழுத்தியும் செய்கின்ற எத்தனையோ பல துன்பங்களில் தப்பியும், காலை மலமொடு - காலைப்பொழுதில் மலத்தாலும், கடும்பகல் பசி - உச்சிப்பொழுதில் பசியாலும், நிசி வேலை நித்திரை - இராப்பொழுதில் தூக்கத்தாலும், யாத்திரை - ஊர்ப் பயணங்களாலும் உண்டாகின்ற துன்பங்களினின்று, பிழைத்தும் - தப்பியும், கருங்குழல் - கரிய கூந்தலையும், செவ்வாய் - சிவந்த வாயினையும், வெள் நகை - வெண்மையாகிய பற்களையும், கார் மயில் ஒருங்கிய சாயல் - கார் காலத்து மயில் போலப் பொருந்திய சாயலையும், நெருங்கி - நெருக்கமாகி, உள் மதர்த்து - உள்ளே களிப்புக்கொண்டு, கச்சு அற நிமிர்ந்து - கச்சு அறும்படி நிமிர்ந்து, கதிர்த்து - ஒளி பெற்று, முன் பணைத்து - முன்னே பருத்து, இடை எய்த்து வருந்த எழுந்து - இடை இளைத்து வருந்தும்படி எழுந்த, புடை பரந்து - பக்கங்களில் பரவி, ஈர்க்கு இடை போகா - ஈர்க்குச்சியும் இடையே நுழையப்பெறாத, இளமுலை - இளங்கொங்கைகளையும் உடைய, மாதர் தம் - மாதருடைய, கூர்த்த - கூர்மையாகிய, நயனக் கொள்ளையில் பிழைத்தும் - கண்களின் கொள்ளைக்குத் தப்பியும், பித்த உலகர் - மயக்கங்கொண்ட உலகினரது, பெருந்துறைப் பரப்பினுள் - பெரிய முயற்சியின் பல துறைகளாகிய பரப்பில் புகுந்து கலக்குகின்ற, மத்தக்களிறு என்னும் - மதயானையென்று சொல்லத்தக்க, அவா இடைப் பிழைத்தும் - ஆசைக்குத் தப்பியும், கல்வியென்னும் - கல்வியென்கிற, பல்கடல் பிழைத்தும் - பலவாகிய கடலுக்குத் தப்பியும், செல்வம் என்னும் - செல்வமென்கின்ற, அல்லலில் பிழைத்தும் - துன்பத்தினின்று தப்பியும், நல்குரவு என்னும் - வறுமையென்கின்ற, தொல்விடம் பிழைத்தும் - பழமையாகிய