பக்கம் எண் :

திருவாசகம்
117


145. இடைமரு துறையும் எந்தாய் போற்றி
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவை யாறா போற்றி
அண்ணா மலையெம் அண்ணா போற்றி

150. கண்ணா ரமுதக் கடலே போற்றி
ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
பாராயத்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

155. மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி
குற்றா லத்தெம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
பாங்கார் பழனத் தழகா போற்றி

160. கடம்பூர் மேவிய விடங்கா போற்றி!

பதப்பொருள் : இடைமருது உறையும் எந்தாய் - திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் எம் அப்பனே, போற்றி - வணக்கம், சடையிடை கங்கை தரித்தாய் - சடையில் கங்கையைத் தாங்கினவனே, போற்றி - வணக்கம், ஆரூர் அமர்ந்த அரசே - திருவாரூரில் தங்கியருளிய தலைவனே, போற்றி - வணக்கம், சீர் ஆர் திருவையாறா - சிறப்புப் பொருந்திய திருவையாற்றில் உள்ளவனே, போற்றி - வணக்கம், அண்ணாமலையெம் அண்ணா - அண்ணாமலையிலுள்ள எம் மேலோனே, போற்றி - வணக்கம், கண் ஆர் அமுதக் கடலே - கண்ணால் நுகரப்படும் அமுதக் கடலாய் உள்ளவனே, போற்றி - வணக்கம், ஏகம்பத்து உறை எந்தாய் - திருவேகம்பத்தில் வாழ்கின்ற எந்தையே, போற்றி - வணக்கம், பாகம் பெண் உரு ஆனாய் - அங்கு ஒரு பாகம் பெண்ணுருவாகியவனே, போற்றி - வணக்கம், பராய்த்துறை மேவிய பரனே - திருப்பராய்த்துறையிற்பொருந்திய மேலோனே, போற்றி - வணக்கம், சிராப்பள்ளி மேவிய சிவனே - திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளிய சிவபிரானே, போற்றி - வணக்கம், இங்கு மற்று ஓர் பற்று அறியேன் - இவ்விடத்து உன்னையன்றி மற்றொரு பற்றையும் யான் அறிந்திலேன் ஆதலின், போற்றி - வணக்கம், குற்றாலத்து எம் கூத்தா - திருக்குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள எம் கூத்தனே, போற்றி - வணக்கம், கோகழி மேவிய கோவே - திருப்பெருந்துறையில் பொருந்திய இறைவனே, போற்றி - வணக்கம், ஈங்கோய் மலை எம் எந்தாய் - திரு ஈங்கோய் மலையில் வாழ்கின்ற எம் தந்தையே, போற்றி - வணக்கம், பாங்கு ஆர் பழனத்து அழகா -