பக்கம் எண் :

திருவாசகம்
124


தோன்றுவான் என்று சாத்திரம் கூறும். "பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தை நாடி" என்பது சிவஞான சித்தி.

தேளா முத்தச் சுடரே போற்றி
ஆளா னவர்கட் கன்பா போற்றி!

பதப்பொருள் : தோளா முத்தச் சுடரே - துளைக்கப்படாத தூய முத்தின் சோதியே, போற்றி - வணக்கம், ஆளானவர்கட்கு அன்பா - அடிமையானவர்க்கு அன்பனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : துளையிடப்பட்ட முத்தினும் துளையிடப்படாத முத்தே விலைமதிப்பும் வீசு ஒளியும் மிகுதியாக உடையது; அதனால், இறைவனைத் "தோளா முத்தச் சுடரே" என்றார்.

ஆரா அருளே போற்றி

200. போரா யிரமுடைப் பெம்மான் போற்றி!

பதப்பொருள் : ஆரா அமுதே - தெவிட்டாத அமுதமே, அருளே - திருவருளே, போற்றி - வணக்கம், பேர் ஆயிரம் உடைப் பெம்மான் - ஆயிரம் திருநாமங்களையுடைய பெருமானே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : ஆயிரம் என்றது மிகுதியைக் குறித்தது. "ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ" என்று அடிகளும், "பேராயிரம்பரவி வானோர் ஏத்தும் பெம்மான்" என்று திருநாவுக்கரசரும் கூறியிருத்தல் காண்க.

தாளி அறுகின் தாராய் போற்றி
நீளொளி யாகிய நிருத்தா போற்றி!

பதப்பொருள் : தாளி அறுகின் தாராய் - நீண்ட தாளினையுடைய அறுகம்புல்லால் கட்டிய மாலையணிந்தவனே, போற்றி - வணக்கம், நீள் ஒளி ஆகிய நிருத்தா - பேரொளி வடிவாகிய கூத்தப்பெருமானே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : நீண்ட தாளினையுடைய அறுகம்புல்லைத் ‘தாளி அறுகு’ என வழங்குவர். இதைக்கொண்டு கட்டிய மாலை இறைவனுக்கு மிக விருப்பமானது என்பதுபற்றி, "தாளியறுகின் தாராய்" என்றார். இவ்வறுகினால் ஆகிய மாலையைக் கூத்தப்பெருமானுக்குச் சிறப்பாக அணிவித்தல் இன்றும் காணத்தக்கது.

சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக் கரிய சிவமே போற்றி!