5. திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது) திருச்சதகம் என்பது, தெய்வத் தன்மை வாய்ந்த நூறு திருப்பாட்டுக் களைக் கொண்ட ஒரு தொகுதி என்னும் பொருளதாம். அடிகள், முதல் அகவலில் இறைவனது அநாதி முறையான பழமையையும், இரண்டாவது அகவலில் அவனது திருவருட் புகழ்ச்சி முறைமையையும், மூன்றாவது அகவலில் அவனது தூல சூக்கும நிலைமையையும், நான்காவது அகவலில் இறைவன் உயிர்களை வினைக்கீடாகப் பிறவியிற்செலுத்துமாற்றினையும் கூறினார். இதனுள் பத்தி வைராக்கிய விசித்திரத்தைக் கூறுகிறார். அவை, பத்தி வைராக்கியங்களின் பல்வேறு தன்மைகள், இறைவன்பால் செலுத்தும் அன்பு, பத்தி எனப்படும்; மனவுறுதி வைராக்கியமாம், இவை பல்வகையால் உயிர்களுக்கு வந்தடையும். பத்துச் செய்யுள்கள் ஒருவகை யாப்பாக, பத்து வகை யாப்புகளால் அந்தாதியாக இத்திருச்சதகம் அருளிச் செய்யப்பட்டது. 1. மெய்யுணர்தல் மெய்யுணர்தலாவது, மெய்ப்பொருளை (இறைவனை) உணர்தல். திருச்சிற்றம்பலம் கட்டளைக் கலித்துறை மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங் கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே. பதப்பொருள் : உடையாய் - என்னை ஆளாக உடையவனே, உன் - உனது, விரை ஆர் - மணம் நிறைந்த, கழற்கு - திருவடிகளைக் குறித்து, என் - என்னுடைய, மெய் அரும்பி - உடல் புளகித்து, விதிர்விதிர்த்து - நடுநடுங்கி, கை தலைவைத்து - கைகளைச் சிரமேல் வைத்து, கண் நீர் ததும்பி - கண்களில் நீர் நிரம்பி, உள்ளம் வெதும்பி - மனம் வாடி, பொய் தவிர்ந்து - பொய்யொழுக்கத்தினின்றும் நீங்கி, உன்னை - உன்னை, போற்றி - வணக்கம், சயசய போற்றி - வெற்றி வெற்றி வணக்கம், என்னும் - என்று துதிக்கின்ற, கை - ஒழுக்கத்தை, நெகிழவிடேன் - அடியேன் நழுவவிடேன், (ஆகையால்) என்னை - எனது
|