பதப்பொருள் : விளங்கும் - புகழால் திகழும், திருவாரூர் உறைவாய் - திருவாரூரில் வீற்றிருப்பவனே, மன்னும் - நிலை பெற்ற, உத்தரகோச மங்கைக்கு - திருவுத்தர கோச மங்கைக்கு, அரசே - தலைவனே, வார் உறு - கச்சு அணியப்பெற்ற, பூண் - ஆபரணங்களோடு கூடிய, முலையாள் கொங்கைகளையுடையவளாகிய உமாதேவியின், பங்க - பாகனே, என்னை வளர்ப்பவனே - என்னைப் பாதுகாப்பவனே, கார் உறு கண்ணியர் கருமை மிகுந்த கண்களையுடைய மாதராரது, ஐம்புலன் - ஐம்புல இன்பத்தில், ஆற்றங்கரை மரமாய் - ஆற்றங்கரையிலே நிற்கின்ற மரம் போல, வேர் உறுவேனை - வேர் ஊன்றுகின்ற என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ? விளக்கம் : ஐம்புல இன்பத்திற்கு ஆற்றங்கரையையும் அவ்வின்பத்தில் திளைக்கும் தமக்கு அதன்கண் நிற்கும் மரத்தையும் உவமையாக்கினார். ஆற்றங்கரையில் வேரூன்றி வளரும் மரம் முதலில் செழுமையாய் வளர்ந்து, பின் வெள்ளம் வந்த காலத்து அழியும். அது போல, ஐம்புல இன்பத்தில் அழுந்தி அனுபவிப்பவர் முதலில் மகிழ்ச்சியைப் பெற்றாலும், பின் துன்பத்திற்கு ஆளாவர் என்பதாம். "ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே" என்ற நல்வழிப்பாட்டையும் நினைவுகூர்க. ஐம்புலன் - ஐம்புல இன்பம். "கண்டுகேட்டு உண்டுஉயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டோடி கண்ணே யுள" என்ற திருக்குறளால் ஐம்புலனுகர்ச்சியும் காருறு கண்ணியர்பால் உண்டு என்பது விளங்குகிறது. இதனால், ஐம்புல இன்பங்கள் இறையின்பத்திற்குத் தடையாகும் என்பது கூறப்பட்டது. 3 வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும் நீங்கிஇப்பால் மிளிர்கின்ற என்னை விடுதிகண் டாய்வெண் மதிக்கொழுந்தொன் றொளிர்கின்ற நீள்முடி உத்தர கோசமங் கைக்கரசே தெளிகின்ற பொன்னும்மின் னும்அன்ன தோற்றச் செழுஞ்சுடரே. பதப்பொருள் : வெள் - வெண்மையாகிய, மதிக்கொழுந்து ஒன்று - ஓர் இளம்பிறையானது, ஒளிர்கின்ற - விளங்குகின்ற, நீள் முடி - நீண்ட சடை முடியையுடைய, உத்தரகோச மங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே - தலைவனே, தெளிகின்ற பொன்னும் - தூய்மையான பொன்னையும், மின்னும் - மின்னலையும், அன்ன - ஒத்த, தோற்றம் - காட்சியையுடைய, செழுஞ்சுடரே - செழுமையாகிய சோதியே, வளர்கின்ற -
|