பக்கம் எண் :

திருவாசகம்
350


அருந்தவருக்கு - அருந்தவத்தினை உடைய அவர்கட்கு, அறம் முதல் நான்கும் - அறம் முதலாகிய நாற்பொருள்களையும், அன்று அருளிச் செய்திலனேல் - அந்நாளில் சொல்லியருளாவிடில், திருந்து - திருந்திய, அவருக்கு - அந்த சனகாதியர்க்கு, உலகு இயற்கை - உலகின் இயல்புகள், தெரியா - புலப்படா.

விளக்கம் : அறம் முதல் நான்காவன, அறம் பொருள் இன்பம் வீடு என்பன. இவற்றை ஏனையோர் போலத் தானும் ஓரிடத்திலிருந்து பிறருக்குச் சொல்லுகின்ற தொழிலை மேற்கொண்டது என்னை என வினாவியவட்கு, ‘இந்நாற்பொருள்களையும் இறைவனே சிலரை நிமித்தமாகக்கொண்டு அருள் செய்திராவிடில் திருத்தமான உலக வாழ்வு நடைபெறாது’ என இறைவனே அதனை உண்மையாகச் சொல்ல வல்லவன் என விடை கூறினாள்.

இதனால், இறைவன் உலகிற்கு ஒழுக்க நெறியை அருளுதல் கூறப்பட்டது.

20

திருச்சிற்றம்பலம்