பக்கம் எண் :

திருவாசகம்
363


தலைவனாய் வந்து, எம்மைக் குற்றேவல் கொண்டருளும் - எம்மையாட்கொண்டருளும், பூ ஆர் - செந்தாமரை மலர் போலும், கழல் பரவி - திருவடிகளைத் துதித்து, பூவல்லி கொய்யாமோ - பூவைக் கொடியினின்றும் கொய்வோம்.

விளக்கம் : திருப்பெருந்துறைப் பெருமான் தம்பொருட்டு நரி பரியாக்கிக்கொண்டு மதுரை நகரத்துக்கு வந்ததை நினைவுகூர்வார், 'மாவார ஏறி மதுரை நகர் புகுந்தருளி' என்றார். இது அடிகளுக்கு அருளும்பொருட்டு வந்ததற்குரிய அகச்சான்று. பழைய உரைப் பதிப்புகளில் இப்பாடல் இல்லை.

இதனால், இறைவன் திருவடி பரவ வேண்டும் என்பது கூறப்பட்டது.

20

திருச்சிற்றம்பலம்