பக்கம் எண் :

திருவாசகம்
364


14. திருவுந்தியார்
(தில்லையில் அருளிச்செய்தது)

உந்தி பறத்தல என்பது மகளிர் விளையாட்டுகளுள் ஒன்று. இதில் அவர்கள் சில பொருளமைத்து, 'உந்திபற' என்று முடியும் பாட்டுகளைப் பாடுவர் என்பது அறியக்கிடக்கின்றது. இசையின் பத்தின்பொருட்டு, 'உந்தீ' என நீட்டல் பெறுகின்றது.

ஞான வெற்றி

திருவருள் வெற்றி என்பதாம்; தனக்கு மாறாகச் செய்யும் செயலை ஒறுத்து அடக்கித் தன்வழிப்படுத்தியதே திருவருள் வெற்றி.

கலித்தாழிசை

திருச்சிற்றம்பலம்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.

பதப்பொருள் : வில்லு வளைந்தது - மேருவாகிய வில் வளைந்தது, பூசல் விளைந்தது - உடனே போர் நிகழ்ந்தது, முப்புரம் உளைந்தன - அதனால் திரிபுரங்கள் வருந்தின, ஒருங்கு உடன் வெந்தவாறு - பின்பு அவை ஒருசேர வெந்து நீறான தன்மையைப் பாடி, உந்தீ பற - தோழி உந்தி பறப்பாயாக.

விளக்கம் : இறைவன் மேருவை வில்லாகக்கொண்டு திரிபுரத்தை அழித்தான். அதனை நினைவுகூர வேண்டும் என்பார், 'முப்புரம் ஒருங்குடன் வெந்தவாறு' என்றார். திரிபுரத்து அசுரர்கள், புத்தன் போதனையால் சிவ வழிபாட்டை விடுத்துச் சிவபெருமானை இகழ்ந்து, தேவர் முதலியோரையும் துன்புறுத்தி வந்தமையால், சிவபெருமானால் அழிக்கப்பட்டனர். ஆகவே, இது திருவருள் வெற்றியாதல் அறிக.

இதனால், மேருவை வில்லாக வளைத்த இறைவனது ஆற்றல் கூறப்பட்டது.

1

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற.

பதப்பொருள் : ஏகம்பர்தம் கையில் - திருவேகம்பநாதர் கையில், ஈர் அம்பு கண்டிலம் - இரண்டு அம்புகளை நாம் காணவில்லை, ஓர் அம்பே - ஓர் அம்பையே கண்டோம், முப்புரம் எதிர்த்து நின்ற கோட்டைகள் மூன்று; ஆயினம், ஒன்று - அந்த ஓர்