பக்கம் எண் :

திருவாசகம்
411


மலர்கின்ற, எழில் நகை கொண்டு - அழகிய நகையினைக் கண்டு நின் திருவடி தொழுகோம் - உன் திருவடியைத் தொழுவோம், பள்ளி எழுந்தருளாய் - பள்ளியெழுந்தருள்வாயாக.

விளக்கம் : 'வாழ்முதலாகிய பொருளே, புலர்ந்தது எழுந்தருளாயே' என்றதால், பெருமான் திருமுன்பு காலையில் புகழ் பாட வேண்டும் என்பதும், 'மலர்கொண்டு திருவடி தொழுகோம்' என்றதால், பின்னர் மலர் தூவி அர்ச்சிக்க வேண்டும் என்பதும் உணரக்கிடக்கின்றன. இன்றும் ஆலயங்களில் நாடோறும் காலையில் திருப்பள்ளியெழுச்சி நடைபெறுவதைக் காணலாம். காலையில் பெருமானைப்பற்றி எண்ணுவதால் மனம் நல்வழியை அறிந்து செல்லும் என்பது கருத்தாம்.

சேற்றில் முளைப்பதால் தாமரைக்குப் பங்கசம் என்ற பெயரும் உண்டு. 'கமலங்கள் மலருத்தண் வயல்சூழ்' என்றதால் திருப்பெருந்துறையின் நீர் வளம் புலனாம்.

இதனால், நம் வாழ்விற்கு முதலாய் உள்ளவன் இறைவன் என்பது கூறப்பட்டது.

1

அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.

பதப்பொருள் : அண்ணல் - பெரியோய், திருப்பெருந்துறை உறை சிவபெருமானே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே, அருள் நிதி தரவரும் - அருட்செல்வத்தைக் கொடுக்க வருகின்ற, ஆனந்த மலையே - இன்ப மலையே, அலைகடலே - அலைகளையுடைய கடல் போன்றவனே, அருணன் - சூரியனது தேர்ப்பாகன், இந்திரன் திசை அணுகினன் - இந்திரன் திசையாகிய கீழ்த்திசையடைந்தான், இருள் போய் அகன்றது - இருள் முழுதும் நீங்கிவிட்டது, உதயம் - உதய மலையில், நின் மலர்த்திருமுகத்தின் கருணையின் - உனது திருமுகத்தினின்றும் தோன்றுகின்ற கருணையைப் போல, சூரியன் எழ எழ - சூரியன் மேலெழுந்தோறும், நயனக் கடிமலர் - உனது கண் போன்ற வாசனை பொருந்திய தாமரை, மலர - விரிய, மற்று - மேலும், அங்கண் ஆம் - அவ்விடத்தில் பொருந்திய, திரள் நிரை அறுபதம் - கூட்டமாகவும் வரிசையாகவும் விளங்குகின்ற வண்டுகள், முரல்வன