பக்கம் எண் :

திருவாசகம்
443


யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
அடிய னேன் இடர்ப் படுவதும் இனிதோ
சீத வார்புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

பதப்பொருள் : போது சேர் அயன் - தாமரைப்பூவில் உறைகின்ற பிரமன், பொரு கடல் கிடந்தோன் - அலைகள் மோதுகின்ற பாற்கடலில் பள்ளி கொண்ட திருமால், புரந்தராதிகள் - இந்திரன் முதலிய தேவர்கள், நிற்க - நிற்பவும், என்னை - அடியேனை, கோதாட்டி - சீராட்டி ஆட்கொண்டவனே, சீதம் - குளிர்ச்சி பொருந்திய, வார்புனல் நிலவிய - நீண்ட நீர் நிலை பெற்ற, வயல் சூழ் - வயல் சூழ்ந்த, திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையைப் பொருந்திய சிவபெருமானே, மருந்தே - அமுதமே, யாது செய்வது - யாது செய்யத் தக்கது, என்று இருந்தனன் - என்று திகைத்து இருக்கின்றேன், அடியனேன் - அடியேன், இடர்ப்படுவதும் - துன்பப்படுவதும், இனிதோ - நல்லதாகுமோ? நின் குரை கழல் காட்டி - உன்னுடைய ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த திருவடியைக் காட்டி, குறிக்கொள்க என்று - அத்திருவடியையே குறியாகக் கொள்வாய் என்று, நின் தொண்டரின் கூட்டாய் - உன் தொண்டரோடு சேர்ப்பாயாக.

விளக்கம் : கோதும் என்றதிலுள்ள 'உம்' அசை. 'கோது மாட்டி' என்றும் பிரிப்பார். இது பெயர். உயிர்கள் அடைய வேண்டிய இலட்சியம் இறைவன் திருவடி. அதனை உணர்த்தி வீடு பேறு நல்க வேண்டும் என்பார், 'குறிக்கொள்கென்று நின் தொண்டரிற் கூட்டாய்' என்றார்.

இதனால், அடியார் கூட்டச் சிறப்புக் கூறப்பட்டது.

8

ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
கால னாருயிர் கொண்டபூங் கழலாய்
கங்கை யாய்அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே
மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

பதப்பொருள் : காலன் - யமனது, ஆர் உயிர் கொண்ட - அரிய உயிரைக் கவர்ந்த, பூங்கழலாய் - தாமரைப் பூப்போன்ற திருவடியுடையவனே, கங்கையாய் - கங்கையைச் சடையில் தரித்தவனே, அங்கி தங்கிய கையாய் - நெருப்பை ஏந்திய