பக்கம் எண் :

திருவாசகம்
444


கையையுடையவனே, சேலும் - கெண்டைமீன்களும், நீலமும் - நீல நிறமுடைய பூக்களும், நிலவிய - பொருந்திய, வயல் சூழ் - வயல் சூழ்ந்த, திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் பொருந்திய சிவபெருமானே, ஞாலம் - உலகத்தவரும், இந்திரன் - தேவர் கோனும், நான்முகன் - பிரமனும், வானவர் - தேவரும், நிற்க - உன்னருளைப் பெற நிற்கவும், எனை நயந்து - என்னை விரும்பி, இனிது ஆண்டாய் - இனிமையாக ஆட்கொண்டருளினை, மாலும் - திருமாலும், ஓலம் இட்டு - (காண முடியாது) முறையிட்டு, அலறும் - கதறுவதற்குரிய, அம்மலர்க்கே - அப்பாத மலர்க்கே, மரக்கணேணையும் - மரக்கண் போன்ற கண்ணையுடைய என்னையும், வந்திடப் பணியாய் - வந்து சேரும்படி அருள் செய்வாயாக.

விளக்கம் : இறைவன் ஆட்கொண்ட பின்னர்த் திருவடி நல்காதிருத்தல் முறையன்று என்பார், 'மரக்கணேனையும் வந்திடப் பணியாய்' என்றார். மரக்கண் என்றது உருக்கமின்மையைக் காட்டும்பொருட்டு.

இதனால், இறைவன் திருவடியே பெரும்பேறு என்பது கூறப்பட்டது.

9

அளித்து வந்தெனக் காவஎன் றருளி
அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில்
திளைத்துந் தேக்கியும் பருகியும் உருகேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே
வளைக்கை யானொடு மலரவன் அறியா
வான வாமலை மாதொரு பாகா
களிப்பெ லாமிகக் கலங்கிடு கின்றேன்
கயிலை மாமலை மேவிய கடலே.

பதப்பொருள் : திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் பொருந்திய சிவபெருமானே, வளைக்கையானொடு - சங்கேந்திய கையினையுடைய திருமாலொடு, மலரவன் - பிரமனும், அறியா - அறியவொண்ணாத, வானவா - தேவனே, மலை மாது ஒரு பாகா - மலைமகளை ஒரு பாகத்திலுடையவனே, கயிலை மாமலை மேவிய - பெரிய கயிலாய மலையின்கண் எழுந்தருளிய, கடலே - கருணைக்கடலே, எனக்கு - அடியேனுக்கு, அளித்து வந்து - கருணை செய்து வந்து, ஆவ என்று அருளி - ஐயோ என்றிரங்கியருளி, அச்சம் தீர்த்த - என் அச்சத்தைப் போக்கிய, நின் அருட்பெருங்கடலில் - உன்னருளாகிய பெரிய கடலினிடத்து, திளைத்தும் - மூழ்கி மகிழ்ந்தும், தேக்கியும் - நிரம்ப இன்புற்றும்,