பருகியும் - குடித்தும், உருகேன் - மனம் உருக மாட்டேன், களிப்பெலாம் - மகிழ்ச்சி முழுவதும் நீங்க, மிகக் கலங்கிடுகின்றேன் - அதிகமாகக் கலங்கப் பெற்றவனாகின்றேன். விளக்கம் : அருளைப் பெற்ற பின் உருக்கம் வர வேண்டும்; அவ்வாறு வரவில்லை என்பார், 'அருட்பெருங்கடலில் திளைத்தும் உருகேன்' என்றார். அதற்கு மாறாகச் செருக்கினால் மயங்குகின்றேன் என்பார், 'களிப்பெ லாமிகக் கலங்கிடு கின்றேன்' என்றார். இது, வினையினால் வருங்குறை. இது நீங்க வேண்டும் என்பதாம். இதனால், இறைவன் திருவடி இன்பத்தினது அனுபவம் கூறப்பட்டது. 10 திருச்சிற்றம்பலம்
|