பக்கம் எண் :

திருவாசகம்
446


24. அடைக்கலப்பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)

அடைக்கலம் என்பது, அடைக்கலமாக ஒப்புவித்துத் தமக்கெனச் செயலின்றியிருத்தல். அவ்வாறு இறைவனிடம் தம்மை ஒப்புவித்துப் பாடிய பத்துப் பாடல்கள் அடைக்கலப்பத்தாம்.]

பக்குவ நிண்ணயம்

வாசனாமலம் உள்ளவரை துன்பம் இருந்துகொண்டேயிருக்கும்; திருவருளைப் பெற இயலாது. இதனை உணர்ந்து இறைவனிடம் அடைக்கலமாக ஒப்புவித்துத் தம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ளுதல் பக்குவ நிண்ணயம்.

கலவைப் பாட்டு

திருச்சிற்றம்பலம்

செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.

பதப்பொருள் : உடையாய் - உடையவனே, செழு - வளமையான, கமலத் திரள் அன - தாமரை மலர்த்தொகுதி போன்ற, நின் சேவடி சேர்ந்து - உனது திருவடியை அடைந்து, அமைந்த - அமைதி பெற்ற, பழுத்த மனத்து அடியர் - கனிந்த மனத்தையுடைய அடியார்கள், உடன் போயினர் - உன்னோடு கலந்துவிட்டனர், யான் பாவியேன் - நான் பாவத்தையுடையேனா யினேன் - புழுக்கண் உடை - புழுக்கள் தமக்கு இடமாக உடைய, புன் குரம்பை - இழிவான இவ்வுடம்பில் கிடக்கின்ற, கல்வி ஞானம் இல்லா - கல்வியும் அறிவும் இல்லாத, பொல்லா அழுக்கு மனத்து அடியேன் - பொல்லாத மாசுகளையுடைய மனத்தையுடைய யான், உன் அடைக்கலம் - உனக்கு அடைக்கலம்.

விளக்கம் : இறைவனுடைய திருவடியைப் பற்றினவர்களுள், பழுத்த மனத்து அடியவர்கள் அவனுடன் சென்றார்கள் என்றும், பாவமுடைமையால் யான் அவ்வாறு செல்லாமல் புன்குரம்பையில் தங்கினேன் என்றுங்கூறினார். உடம்பின் இழிவு கருதி, 'புழுக்கணுடைப் புன்குரம்பை' என்றார். கண் - இடம். இதனையே,