பக்கம் எண் :

திருவாசகம்
45


பதப்பொருள் : கேவேடர் ஆகி - வரையராகி, கெளிறது படுத்து - கெளிற்று மீனைப் பிடித்து, மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் - பெருமை வாய்ந்த விருப்பத்தினையுடைய ஆகமங்களை அக்கெளிற்றினிட மிருந்து கவர்ந்தும்.

விளக்கம் : முன்னொரு காலத்தில் இறைவன் அம்பிகைக்கு ஆகம நூற்பொருளை உபதேசித்தான். ஆனால், அம்பிகை அந்நூற்பொருளில் போதிய நாட்டம் செலுத்தவில்லை. அதனால், உமை இறைவனது சாபத்தை ஏற்று, வலைஞனுக்கு மகளாய்ப் பிறந்தாள். இதைக் கேள்வியுற்ற மூத்த பிள்ளையாரும் இளைய பிள்ளையாரும் இறைவனது திருமுன்பு வந்து, அவன் கையிலிருந்த ஆகம நூல்களை வாங்கிக் கடலிலே வீசி எறிந்தனர். சமயம் தெரியாது இவர்களை உள்ளே அனுமதித்த நந்தி தேவரும் கடலிலே சுறா மீனாகும்படி சபிக்கப்பட்டார். பின்பு இறைவனே சாபந்தீர்க்க வேண்டி வலைஞனாய் வந்து, சுறா மீனாக ஆகமத்தைத் தாங்கித் திரிந்த நந்தி தேவரின் சாபத்தை நீக்கி, ஆகம நூலைப் பெற்று, இறைவியாகிய வலைஞமாதை மணந்தான். இவ்வரலாறு திருவிளையாடற்புராணம் வலைவீசின படலத்திற்காணப்படுவது. இவ்வரலாற்றில் சுறாமீன் படுத்ததாகக் கூறப்படினும், அடிகள் கூறுமாறு கெளிற்று மீன்படுத்தான் எனவே கொள்ளுதல் வேண்டும்.

மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து

20. உற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும்

பதப்பொருள் : அவைதம்மை - அவ்வாகமங்களை, மகேந்திரத்து இருந்து - மகேந்திரமலையிலிருந்து, உற்ற ஐம்முகங்களால் - பொருந்திய ஐந்து திருமுகங்களாலும், பணித்தருளியும் - உபதேசித்தருளியும்.

விளக்கம் : முன்பு குறித்தவாறு இறைவன் மகேந்திரமலை யிலிருந்து தோற்றுவித்த ஆகமங்களைத் தூய ஆன்மாக்களாகிய முனிவர்களுக்கும் ஐந்து திருமுகங்களால் உபதேசித்தருளினான் என்பது இதனால் கிடைக்கிறது. ஐம்முகங்களாவன ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்பன. இவை முறையே மேல், கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்குத் திசைகளை நோக்கும். ஐந்து திசைகளையும் காணக்கூடியவ னாதலாலே எல்லாம் அறிபவன் என்பதும், ஆகம நூல்களைத் தோற்றுவிக்கக் கூடியவனாதலாலே எல்லா அறிவுக்கும் இருப்பிடமானவன் என்பதும் விளங்கு கின்றன. மற்று - அசை.

நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமி லாரிய னாயமர்ந் தருளியும்

பதப்பொருள் : நந்தம்பாடியில் - நந்தம்பாடி என்னும் திருப்பதியில், நான்மறையோனாய் - வேதியனாய், அந்தம் இல் - முடிவற்ற, ஆரியனாய் அமர்ந்து அருளியும் - ஆசிரியனாய் எழுந்தருளியும்.