மாட்டேன், நின்னையே அறியேன் - உன்னையும் அறிய மாட்டேன், நின்னையே அறியும் - உன்னையே அறிகின்ற, அறிவு அறியேன் - ஞானத்தையும் உணர மாட்டேன், உன் அடைக்கலம் - உனக்கு அடைக்கலம். விளக்கம் : பிரிவு என்பது பிறிவு என எதுகை நோக்கித் திரிந்தது. வந்திப்பதோர் நெறியாவது, இறைவனை வணங்குவதற்குரிய வேதாகம நெறியாம். இறைவனை அறிதலாவது, அவனது உண்மை நிலையையறிதலாம். 'நின்னையே அறியும் அறிவு' என்பது சிவஞானம். சிவஞானத்தினால்தான் இறைவனை உணர முடியும் என்பதாம். இதனால், இறைவனைக் சிவஞானத்தினால்தான் உணர முடியும் என்பது கூறப்பட்டது. 9 வழங்குகின் றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின் றேன்விக்கி னேன்வினை யேன்என் விதியின்மையால் தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக்கொள்ளாய் அழுங்குகின் றேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே. பதப்பொருள் : உடையாய் - உடையவனே, வழங்குகின்றாய்க்கு - வழங்குகின்ற உன்னிடத்தில், உன் அருள் - உன் திருவருளாகிய, ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு - அரிய அமுதத்தை அள்ளிக்கொண்டு, விழுங்குகின்றேன் - விழுங்குகின்றவனாகிய, வினையேன் - தீவினையுடையேனாகிய யான், என் விதியின்மையால் - எனது நல்லூழின்மையால், விக்கினேன் - தொண்டையில் விக்கிக்கொள்ளப்பட்டேன், தழங்கு - ஒலிக்கின்ற, அரு - அருமையாகிய, தேன் அன்ன - தேனை யொத்த, தண்ணீர் - குளிர்ந்த நீரை, பருகத்தந்து - யான் பருகக் கொடுத்து, உய்யக் கொள்ளாய் - என்னை உய்யக் கொள்வாயாக, அடியேன் - யான், அழுங்குகின்றேன் - வருந்துகின்றேன், உன் அடைக்கலம் - உனக்கு அடைக்கலம். விளக்கம் : வழங்குகின்றாய்க்கு, வேற்றுமை மயக்கம். விக்கினேன் என்றது, திருவருளைப் பெற்றும் அடியாருடன் செல்லாது உலகத்தில் நின்றதை. தண்ணீர் தருதலாவது, மீளக் காட்சி வழங்குதல். அழுங்குதலாவது, காண வேண்டுமென்று வருந்துதல். இதனால், இறையனுபவத்தைப் பெறுவதற்குப் பக்குவம் வேண்டும் என்பது கூறப்பட்டது. 10 திருச்சிற்றம்பலம்
|