பக்கம் எண் :

திருவாசகம்
484


29. அருட்பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)

அருளை வேண்டிப் பாடிய பத்துப் பாடல்களைக்கொண்டது அருட்பத்து. அருளின்றி வீடுபேறு கிட்டாது என்பதாம்.

மகாமாயாசுத்தி

மாயையினின்று விலகித் தூய்மை பெறுதல், மாயையாவது, உலகம்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
பங்கயத் தயனும்மால் அறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பதப்பொருள் : சோதியே - சோதிப் பிழம்பானவனே, சுடரே - ஒளிப்பிழம்பில் உள்ள கதிர்களாய் உள்ளவனே, சூழ் ஒளி விளக்கே - சூழ்ந்து ஒளியையுடைய விளக்குப் போன்றவனே, சுரிகுழல் - சுருண்ட கூந்தலையும், பணைமுலை - பருத்த தனங்களையும் உடைய, மடந்தை - உமாதேவியின், பாதியே - பாகத்தை உடையவனே, பரனே - மேலானவனே, பால் கொள் - பாலினது நிறத்தைக் கொண்ட, வெள் நீற்றாய் - திரு வெண்ணீற்றை யணிந்தவனே, பங்கயத்து அயனும் - தாமரை மலரை இடமாகவுடைய பிரமனும், மாலும் - திருமாலும், அறியா - அறிய முடியாத, நீதியே - நீதியானவனே, செல்வத் திருப்பெருந்துறையில் - செல்வம் மிக்க திருப்பெருந்துறையில், நிறைமலர் - நிறைந்த மலர்களையுடைய, குருந்தம் மேவிய - குருந்த மரநிழலில் பொருந்திய, சீர் ஆதியே - சிறப்புடைய முன்னவனே, அடியேன் - அடியேனாகிய நான், ஆதரித்து அழைத்தால் - உன்னை விரும்பி அழைத்தால், அதெந்துவே என்று அருளாய் - அதென்ன என்று சொல்லி அருள் புரிவாயாக.

விளக்கம் : ‘சோதியே சுடரே சூழொளி விளக்கே’ என்றது, இறைவன் ஒளிப்பொருளானவன் என்னும் குறிப்புடையது. ‘சோதி’ என்பது இறைவனது பெருநிலையையும், ‘சுடர்’ என்பது அவன்