எங்கள்நா யகனே என்உயிர்த் தலைவா ஏலவார் குழலிமார் இருவர் தங்கள்நா யகனே தக்கநற் காமன் தனதுடல் தழல்எழ விழித்த செங்கண்நா யகனே திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. பதப்பொருள் : எங்கள் நாயகனே - எங்கள் நாதனே, என் உயிர்த் தலைவா - என்னுயிர்த் தலைவனே, ஏலம் - மயிர்ச் சாந்தணிந்த, வார் - நீண்ட, குழலிமார் இருவர் தங்கள் - கூந்தலையுடைய இரு தேவியர்க்கு, நாயகனே - நாதனே, தக்க நல் - சிறந்த அழகுடைய, காமன் தனது உடல் - மன்மதனது உடம்பு, தழல் எழ விழித்த - நெருப்பு எழும்படி பார்த்த, செங்கண் - செம்மையாகிய நெருப்புக் கண்ணையுடைய, நாயகனே - தலைவனே, திருப்பெருந்துறையில் - திருப்பெருந்துறையின்கண், செழுமலர் - செழுமையான மலர்களையுடைய, குருந்தம் மேவிய - குருந்தமர நிழலில் பொருந்திய, சீர் அங்கணா - சிறப்புடைய அழகிய கண்ணையுடையவனே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேனாகிய யான் அன்புடன் அழைத்தால், அதெந்துவே என்று அருளாய் - அஞ்சாதே என்று அருள் புரிவாயாக. விளக்கம் : ‘குழலிமார் இருவர்’ என்றது. மலைமகளையும் சலமகளையும் ஆம். மலைமகள் இறைவனோடிருந்து அருளைப் புரிபவள். இச்சத்தி அருள் சத்தி எனப்படும். சலமகள் ஆன்மாக்களோடிருந்து போகத்தைக் கொடுப்பவள். இச்சத்தி மறைப்புச் சத்தி எனப்படும். காமனை எரித்தது இறைவனது மறச்செயலைக் காட்டிற்று. எனினும், அன்போடு அழைத்தால் அருளைப் புரிவானாதலின், ‘அங்கணா’ என்றார். இதனால் இறைவனே மறைப்பும் அருளும் செய்பவன் என்பது கூறப்பட்டது. 3 கமலநான் முகனுங் கார்முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுதற் கரிய விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய் திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. பதப்பொருள் : கமல நான்முகனும் - தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், கார்முகில் நிறத்துக் கண்ணனும் -
|