பக்கம் எண் :

திருவாசகம்
495


மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றிம லங்கெ டுத்தபெ ருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி மேல்வி ளைவத றிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவ டிகளி ரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காம லேவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே.

பதப்பொருள் : மலங்கினேன் - கலங்கினவனாகிய என்னுடைய, கண்ணின் நீரை மாற்றி - கண்ணீரைத் துடைத்து, மலம் கெடுத்த - வினையை ஒழித்த, பெருந்துறை - திருப்பெருந்துறைப் பெருமானே, விலங்கினேன் - நான் உன்னை விட்டு விலகினேன், வினைக்கேடனேன் - தீவினையாகிய கெடுதியையுடையேன், இனிமேல் விளைவது அறிந்திலேன் - இனிமேல் நடப்பதை அறியாதேன், இலங்குகின்ற - விளங்குகின்ற, நின் சேவடிகள் இரண்டும் - உன்னுடைய திருவடிகள் இரண்டையும், வைப்பு இடம் இன்றி - வைத்து வழிபடும் நிலை இன்றி, கலங்கினேன் - மயங்கினேன், கலங்காமல் - அங்ஙனம் கலங்காதபடி, கழுக்குன்றிலே வந்து - திருக்கழுக்குன்றிலே வந்து, காட்டினாய் - உன்னுடைய அருட்டிருக் கோலத்தைக் காட்டினாய்.

விளக்கம் : ‘திருப்பெருந்துறையில் குருவாய் வந்து காட்சி கொடுத்தும் உலக மாயையில் மயங்கினமையால் உனது திருவடியை வழிபட மாட்டாது வருந்தினேன்’ என்பார். ‘இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும் வைப்பிட மின்றியே கலங்கினேன்’ என்றும், ‘ஆனால் அந்நிலையினை மாற்றி, உன்னை நீ மீண்டும் காட்டியருளிய இடம் திருக்கழுக்குன்றம்’ என்பார், ‘கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே’ என்றும் கூறினார்.

இதனால், இறைவன் காட்சியே மயக்கத்தைப் போக்க வல்லது என்பது கூறப்பட்டது.

3

பூணொ ணாததொர் அன்பு பூண்டுபொ ருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி நடுக்க டலுள்அ ழுந்திநான்
பேணொ ணாதபெ ருந்து றைப்பெருந் தோணி பற்றிஉ கைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே.

பதப்பொருள் : பூண் ஒணாதது - பிறரால் அடையப் பெறாததாகிய, ஓர் அன்பு பூண்டு - ஒப்பற்ற பேரன்பினை உனது அன்பர் பூண்டு, பொருந்தி நாள்தொறும் போற்றவும் - அவ்வன்பிலே நிலைத்து நின்று தினந்தோறும் உன்னை வழிபடவும், நாண் ஒணாதது - ஒருவரும் அடைய ஒண்ணாததாகிய, ஓர் நாணம் எய்தி - பெரிய வெட்கத்தை அடைந்து, நடுக்கடலுள் அழுந்தி - கரையற்ற துன்பமாகிய கடலின் நடுவில் அழுந்தி, நான் - நான், பேண் ஒணாத - விரும்புதற்கரிய, பெருந்துறை -திருப்பெருந் துறையில் செய்த