என்னை ஆட்கொண்டருளி, நின் - உனது, தூய்மலர்க்கழல் - தூய்மையான தாமரை மலர் போன்ற திருவடியை, தந்து - கொடுத்து, எனை - அடியேனை, கயக்க வைத்து - மெலிய வைத்து, அடியார் முன்னே - பின்பு உன் அடியார்களுக்கு எதிரில், கழுக்குன்றிலே வந்து - திருக்கழுக்குன்றிலே வந்து, காட்டினாய் - உன் திருக்கோலத்தை எனக்குக் காட்டியருளினாய். விளக்கம் : இயக்கர், பதினெண்கணத்துள் ஒரு வகையினர். ‘மும்மலத்தினாலே பிறவியும், பிறவியினாலே வினையும், வினையினாலே துன்பமும் உண்டாம்’ என்பார், ‘மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்’ என்றார். இயக்கிமாராகிய பெண்களுக்குத் தன் எண் குணங்களையும் அருளிய பெருமான் தமக்கும் அருளினான் என்பதாம். இதனால், இறைவன் திருவடியே தளர்ச்சியைப் போக்கி மேன்மையைத் தரவல்லது என்பது கூறப்பட்டது. 7 திருச்சிற்றம்பலம்
|