பக்கம் எண் :

திருவாசகம்
516


பதப்பொருள் : ஏழை பங்கா - உமையொரு பாகனே, எம் கோவே - எங்கள் தலைவனே, எண்டோள் - எட்டுத் தோள்களையும் முக்கண் - மூன்று கண்களையுமுடைய, எம்மானே - எம் பெரியோனே, ஒன்றும் போதா நாயேனை - ஒன்றுக்கும் பற்றாத நாய் போன்ற என்னை, உய்யக் கொண்ட - அன்று உய்யக் கொண்டருளின, நின் கருணை - உன்னுடைய கருணையானது, இன்று இன்றிப் போய்த்தோ - இன்று இல்லாமற்போய்விட்டதோ? குன்றே அனைய குற்றங்கள் - மலையைப் போன்ற தவறுகளையும், குணம் ஆம் என்று நீ கொண்டால் - குணங்கள் என்றே நீ ஏற்றுக் கொண்டால், என் கெட்டது - எனக்கு எப்பொருள் கெட்டொழிந்த தாகும்? (எதுவும் இல்லை; ஆகையால்,) இரங்கிடாய் - இரங்கி யருள்வாயாக.

விளக்கம் : 'போயிற்றோ' என்பது, 'போய்த்தோ' என மருவியது. குன்றேயனைய குற்றமாவது, மிகப்பெரிய குற்றமாம். ஆட்கொண்டும் அருளாமைக்குக் காரணம், தாம் செய்த குற்றமெனில், 'குற்றத்தைக் குணமாகக் கொண்டால், உன்னை யார் என்ன செய்யக்கூடும்? என்பார், 'குற்றங்கள் குணமாமென்றே நீ கொண்டால், என்தான் கெட்டது? என்றார். இரங்கியருள வேண்டும் என்பதாம்.

இதனால், இறைவன் குற்றம் செய்யினும் குணமெனக் கொள்பன் என்பது கூறப்பட்டது.

3

மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ்
வூனே புகஎன் றனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளும்நாள் என்றென் றுன்னைக் கூறுவதே.

பதப்பொருள் : மான் நேர் நோக்கி - மானைப் போன்ற பார்வையுடைய உமையம்மையின், மணவாளா - கணவனே, மன்னே - நிலை பெற்றவனே, கோனே - தலைவனே, நின் சீர் - உனது பெருமையை, மறப்பித்து - மறக்கும்படி செய்து, இவ்வூனே புக - இவ்வுடம்பின்கண்ணே புகுமாறு, என்றனை நூக்கி - என்னைத் தள்ளி, உழலப் பண்ணுவித்திட்டாய் - இவ்வுலகில் அலையும்படி செய்துவிட்டாய், ஆனால் - உன் செயல் இதுவாயின், இனி, நீயே அடியேன் அறியாமை அறிந்து - நீயே அடியேனது பேதைமையை உணர்ந்து, அருள் செய்து - அருள் புரிந்து, கூவிக்கொள்ளும் நாள் என்று - என்னை மீள உன்பால் அழைத்துக்கொள்ளும் நாள் எப்போது? உன்னைக் கூறுவது என்று - அதன்பின் நான் உன்னைப் புகழ்ந்து பாடுவது எப்போது?

விளக்கம் : இறைவனது பெருமையை மறந்து உடம்பினது நன்மையை வியந்து அலையும்படி செய்துவிட்டான் பெருமான் என்று வருந்துவார், 'நின்சீர் மறப்பித்திவ்வூனே புக என்றனை நூக்கி