பக்கம் எண் :

திருவாசகம்
521


விளக்கம் : 'யானுன் திருவடியைக் கண்டு இன்புற வேண்டுமென்று பெரிதும் விழைந்து வருந்துகின்றேன்' என்பார், 'அழகே புரிந்திட்டடி நாயேன் அரற்றுகின்றேன்' என்றார். ஆதலின், வீடுபேறு அளித்து விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டியபடி. இப்பாடலில் இரண்டாம் மூன்றாம் அடிகளில் மூன்றாம் எழுத்து எதுகை வந்துள்ளது.

இதனால், இறைவன் திருவடியே அழியா இன்பம் தர வல்லது என்பது கூறப்பட்டது.

10

திருச்சிற்றம்பலம்