பக்கம் எண் :

திருவாசகம்
523


கொலோ' என்ற திருநாவுக்கரசர் வாக்கையும் காண்க. இறைவன் அடியாருடன் சேர்ந்து இருக்கும் காலம் எனக்கு எப்போது வரும் என்று வேண்டியபடி.

இதனால், இறைவனது திருவடிப் பேறே கவலையைப் போக்க வல்லது என்பது கூறப்பட்டது.

1

நானாரடி அணைவான்ஒரு நாய்க்குத்தவி சிட்டிங்
கூனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான்உளம் பிரியான்
தேனார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாததோர் வளம்ஈந்தனன் எனக்கே.

பதப்பொருள் : அடி அணைவான் - திருவடியைச் சேர்வதற்கு, நான் ஆர் - எனக்கு என்ன தகுதியுள்ளது? எனினும், தேன் ஆர் சடை முடியான் - வண்டு நிறைந்த சடையையுடையவனும், திருப்பெருந்துறை உறைவான் - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனுமாகிய இறைவன், ஒரு நாய்க்கு - நாய் ஒன்றிற்கு, தவிசு இட்டு - ஆசனம் கொடுத்தது போல எனக்கு அவன் திருவருளைக் கொடுத்து, இங்கு - இவ்விடத்தில், ஊன் ஆர் உடல் புகுந்தான் - தசை பொதிந்த உடம்பின்கண் புகுந்தான், உயிர் கலந்தான் - எனது உயிரில் கலந்தான், உளம் பரியான் - என் மனத்தினின்றும் பிரியமாட்டான்; இவ்வாற்றால், வானோர்களும் அறியாதது - தேவர்களும் அறிய முடியாததாகிய, ஓர் வளம் - ஒரு செல்வத்தை, எனக்கு ஈந்தனன் - எனக்கு அவன் தந்தருளினான்.

விளக்கம் : தமக்கு ஒரு தகுதியும் இல்லாமை குறித்து, 'நானார் அடி அணைவான்? என்றார். 'அணைவான்' என்பதில் வான் எதிர் கால வினையெச்ச விகுதி, அணைவதற்கு என்ற பொருளில் நின்றது. 'வளம் என்பது முத்திச் செல்வத்தைக் குறித்தது. திருப்பெருந்துறைப் பெருமான் தமக்கு அருள்செய்தது, தம் தகுதிபற்றியன்று; அவனது கருணையினாலேதான் என்றபடி.

இதனால், இறைவன இன்பம் தேவர்களாலும் பெறுதற்கு அரியது என்பது கூறப்பட்டது.

2

எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன்
மனவாசகங் கடந்தான்எனை மத்தோன்மத்த னாக்கிச்
சினமால்விடை உடையான்மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன்எனைச் செய்தபடி றறியேன்பரஞ் சுடரே.

பதப்பொருள் : மனவாசகம் கடந்தான் - மனத்துக்கும் வாக்குக்கும் அப்பாற்பட்டவனும், சினமால் விடை உடையான் - கோபத்தையுடைய பெரிய இடத்தையுடையவனும், மன்னு - நிலை பெற்ற, திருப்பெருந்துறை உறையும் - திருப்பெருந்துறையில்