செல்லாதீர்; எக்காலத்துள்ளும் - எல்லாக் காலத்தையும்விட, தென்னன் - பாண்டியனது, நல்நாட்டு இறைவன் - நன்மை மிகுந்த நாட்டுக்கு இறைவனாகிய சிவபெருமான், கிளர்கின்ற காலம் - விளங்கியருளுகின்ற காலம், இக்காலம் - இந்தக் காலமேயாகும்; அறிவு ஒண் கதிர் வாள் - ஞானமாகிய ஒளிக்கதிரை வீசுகின்ற வாளை, உறை கழித்து - உறையினின்றும் எடுத்து, ஆனந்த மாக்கடவி - ஆனந்தமாகிய குதிரையைச் செலுத்தி, இருநிலத்தே - பரந்த உலகத்திலே, எதிர்ந்தார் பிறப்பை - எதிர்ப்பட்டவரது பிறவியாகிய மரத்தை, புரள எறியும் - புரண்டு விழும்படி எறிவான்; அவன் முன் செல்லுங்கள். விளக்கம் : பிறவி ஓயாது வருதலின், 'செறியும் பிறவி' என்றார். அறிவை 'வாள்' என்றதற்கேற்பப் 'பிறப்பு' மரம் என்று விரித்துக்கொள்ளப்பட்டது. இறைவன் ஞானவாள் ஏந்தி ஆனந்தமாகிய குதிரையின்மேல் ஏறி வந்து பிறவியாகிய மரத்தை வெட்டி வீழ்த்துகிறான் என்பதாம். இதனால், இறைவனது ஞானத்தைப் பெற்றுப் பிறவியை நீக்கிக்கொள்ள வேண்டும் என்பது கூறப்பட்டது. 4 காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின் கருதரிய ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே. பதப்பொருள் : கருது அரிய - நினைத்தற்கு அருமையான, ஞாலம் உண்டானொடு - உலகத்தை உண்ட திருமாலோடு, நான்முகன் - பிரமன், வானவர் - மற்றைய தேவர்களும், நண் அரிய - அடைவதற்கு அருமையான, ஆலம் உண்டான் - நஞ்சத்தை அமுதாகக் கொண்டவனாகிய, எங்கள் பாண்டிப் பிரான் - எங்கள் பாண்டிப்பெருமானாகிய இறைவன், தன் அடியவர்க்கு - தன் அடியவர்களுக்கு, மூல பண்டாரம் வழங்குகின்றான் - தனது முதற்கருவூலத்தைத் திறந்து அள்ளி வழங்குகின்றான்; அதனைப் பெறுதற்கு, வந்து முந்துமின் - விரைவாக வந்து முந்திக் கொள்ளுங்கள்; காலம் உண்டாகவே - முன்னதாகவே, காதல் செய்து - அவனிடத்தில் அன்பு செய்து, உய்மின் - பிழையுங்கள். விளக்கம் : இறைவனிடத்து அன்பு செய்து வாழ்வதே மானிடப் பிறவியின் பயனாதலின், 'காதல் செய்துய்ம்மின்' என்றார். அதனை நீண்ட நாள் செய்தற்கு இளமையிலே தொடங்க வேண்டும் என்பதற்கு, 'காலம் உண்டாகவே' என்றார். பிரளய காலத்தில்
|