பக்கம் எண் :

திருவாசகம்
555


சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?

விளக்கம் : இறை நினைவால் உடம்பில் மயிர்க்கூச்செறிய இன்பம் சுரத்தலால், புலால் உடம்பு பொன்னுடம்பாக மாறும் என்பார், 'புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலா' என்றார். எலும்பு உருகுவது இறைவன் கருணையை எண்ணுவதாலாம். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர், பிறப்பு இறப்பாகிய கட்டுகள் நீங்குமாதலின், 'பிறப்பே இறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்த நற்சோதீ என்றார்.

இதனால், இறைவன் பிறப்பு இறப்புகளால் வரும் துன்பத்தைப் போக்கியருள வல்லவன் என்பது கூறப்பட்டது.

10

திருச்சிற்றம்பலம்