பக்கம் எண் :

திருவாசகம்
560


என்றார் நாயனாரும். இனி இத்துயரமானது 'அஞ்சேல்' என்று அருளினமையால் நீங்கியது என்பார், 'அஞ்சேலென் றாண்டவாறன்றே உய்ஞ்சேன்? என்றார்.

இதனால், இறைவனது வாக்கு, மையலைப் போக்கியருள வல்லது என்பது கூறப்பட்டது.

6

என்பாலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க்கும் அறியவொண்ணாத்
தென்பாலைத் திருப்பெருந் துறையுறையுஞ் சிவபெருமான்
அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட
தென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே.

பதப்பொருள் : எம்பெருமானே - எம்பிரானே, இமையவர்க்கும் அறியவொண்ணா - தேவர்களுக்கும் அறிய முடியாத, தென்பால் - தென் திசையிலுள்ள, திருப்பெருந்துறை உறையும் - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற, சிவபெருமான் நீ - சிவபிரானாகிய நீ, இங்கு - இவ்விடத்தில், என்பால் - என்னிடத்திலுள்ள, பிறப்பு அறுத்து - பிறப்பை அறுத்து, அன்பால் - அன்பினால், அகம் நெகவே புகுந்தருளி - என் மனம் நெகிழும்படியாகவே எழுந்தருளி, ஆட்கொண்டது - ஆண்டு கொண்டது, என்பாலே நோக்கியவாறு அன்றே - என்னிடத்திலே திருவருள் நோக்கம் செய்ததனால் அல்லவா?

விளக்கம் : என்பாலை, தென்பாலை என்பவற்றிலுள்ள ஐகாரங்கள் சாரியை. 'என் பிறவி வேர் அற்றொழிய யான் மேன்மையடைந்தது இறைவன் திருநோக்கம் பாலித்தத னாலன்றோ!' என்று வியந்து கூறுவார், 'ஆட்கொண்டது என்பாலே நோக்கியவா றன்றே? என்றார்,

இதனால், இறைவனது திருநோக்கம் பிறப்பையறுத்து அருள வல்லது என்பது கூறப்பட்டது.

7

மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா
ஓத்தாதே பொருளானே யுண்மையுமாய் இன்மையுமாய்
பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே.

பதப்பொருள் : எம்பெருமானே - எம்பிரானே, மூத்தானே - எப்பொருட்கும் முன்னவனே, மூவாத முதலானே - மூப்பு அடையாத முதல்வனே, முடிவு இல்லா - எல்லையற்ற, ஒத்தானே - வேதமானவனே, பொருளானே - அவ்வேதத்தின் பொருளுமானவனே, உண்மையுமாய் இன்மையுமாய் - மெய்யர்க்கு மெய்யனாய், அல்லாதார்க்கு அல்லாதவனாய், பூத்தானே - தோன்றினவனே, இங்குப் புரள்வேனை - இவ்வுலகத்தில்