பக்கம் எண் :

திருவாசகம்
562


பதப்பொருள் : தேன் ஆய் - தேன் போன்று, இன் அமுதம் ஆய் - இனிமையான அமுதத்தையும் போன்று, தித்திக்கும் - இனிக்கின்ற, சிவபெருமான் - சிவபிரானானவன், தானே வந்து - தானே எழுந்தருளி வந்து, எனது உள்ளம் புகுந்து - என் மனத்துள் புகுந்து, ஊர் ஆரும் - உடம்போடு கூடிய, உயிர் வாழ்க்கை - உயிர் வாழ்க்கையை, வெறுத்து ஒறுத்திட - வெறுத்து நீக்கும்படி, அடியேற்கு அருள் செய்தான் - அடியேனாகிய எனக்கு அருள் புரிந்தான்; அதனால், சிவாயநம எனப் பெற்றேன் - சூக்கும பஞ்சாக்கரத்தைச் சொல்லப்பெற்றேன்; நானேயோ தவம் செய்தேன் - இப்பேற்றைப் பெறுவதற்கு நானோ முற்பிறப்பில் தவம் செய்தேன்?

விளக்கம் : நகாரத்தை முதலாகக்கொண்ட நமசிவாய என்பது தூல பஞ்சாட்சரம்; சிகாரத்தை முதலாகக் கொண்ட சிவாயநம என்பது சூக்கும் பஞ்சாட்சரம். தூல பஞ்சாட்சரம் போகத்தைக் கொடுப்பது; சூக்கும பஞ்சாட்சரம் வீடு போற்றை அளிப்பது. ஆதலின், அடியேனுக்கு வீடு போற்றை அளிப்பதற்குச் சூக்கும பஞ்சாட்சரத்தை அருளினான் என்பார், 'சிவாயநம எனப் பெற்றேன்' என்றார்.

இதனால், திருவைந்தெழுத்தை ஒதுவதற்கு முன்னைத் தவம் வேண்டும் என்பது கூறப்பட்டது.

10

திருச்சிற்றம்பலம்