90. புறம்பய மதனில் அறம்பல அருளியும்; பதப்பொருள் : புறம்பயல் அதனில் - திருப்புறம்பயத்தில், அறம் பல அருளியும் - பல அறச்செயல்களை அருளிச்செய்தும். விளக்கம் : திருப்புறம்பயத்தில் சனகாதி நால்வர்க்கு இறைவன் அறம் அருளிச் செய்தனன் என்பர். குற்றா லத்துக் குறியா யிருந்தும்; பதப்பொருள் : குற்றாலத்து - திருக்குற்றாலத்தில், குறியாய் இருந்தும் - அடையாளமாய் இருந்தும். விளக்கம் : திருக்குற்றாலத்தில் திருமால் வடிவத்தையே அகத்திய முனிவர் சிவலிங்க உருவமாகச் செய்தனர் என்பதைக் கந்தபுராணத்துட் காண்க. திருக்குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. அந்தமில் பெருமை யழலுருக் கரந்து சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண் டிந்திர ஞாலம போலவந் தருளி 95. எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத் தானே யாகிய தயாபரன் எம்மிறை சந்திர தீபத்துச் சாத்திர னாகி அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுட் சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும்; பதப்பொருள் : அந்தம் இல் பெருமை - முடிவில்லாத பெருமையை யுடையது, அழல் உருக்கரந்து - நெருப்புப் போலும் உருவத்தை மறைத்து, சுந்தர வேடத்து - அழகிய கோலத்தினையுடைய, ஒரு முதல் உருவு கொண்டு - ஒப்பற்ற முதற்பொருளின் உருவங்கொண்டு, இந்திர ஞாலம் போல வந்து அருளி - இந்திர ஞாலம் போல எழுந்தருளி, எ எவர் தன்மையும் - எல்லார் குணமும், தன்வயின் படுத்து - தன்னிடத்து அடக்கி, தானே ஆகிய - தானொருவனே முதல்வனாய் நிற்கிற, தயாபரன் எம் இறை - அருளினால் மேம்பட்ட எம் தலைவன், சந்திர தீபத்து - சந்திர தீபம் என்னும் தலத்தில், சாத்திரன் ஆகி - சாத்திரப் பொருளை உபதேசிப்பவனாய், அந்தரத்து இழிந்து வந்து - ஆகாயத்தினின்றும் இறங்கி வந்து, அழகு அமர் பாலையுள் - அழகு வாய்ந்த திருக்கழிப்பாலை என்னும் தலத்தில், சுந்தரத் தன்மையொடு - அழகிய திருக்கோலத்தோடு, துதைந்து இருந்து அருளியும் - பொருந்தியிருந்தருளியும். விளக்கம் : ஜால வித்தை காட்டுபவன் மக்களை மயக்கும் பொருட்டு ஓர் உருவத்தைக் காட்டி மயக்கி, பின்னர்
|