தலைவன், எல்லையில்லாத - எல்லையற்ற, தன் இணை மலர்க்கழல் காட்டி - தனது திருவடித் தாமரைகள் இரண்டையுங் காட்டியருளி, அறிவு தந்து - உண்மை அறிவினைக் கொடுத்து, ஆண்டு கொண்டருளி - ஆட்கொண்டருளிய, அற்புதம் அறியேன் - அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன். விளக்கம் : இயற்கையான அழகுடன் செயற்கையாலும் மயக்குகின்றனர் என்பார், 'கிறியும் கீழ்மையும்' என்றார். இத்தகைய நடையுடை பாவனைகள் மேலும் மயக்கத்தைத் தருவனவாதல் அறிக, 'பெண்களது நடையையும், தன்மையையும், அழகையும் எண்ணி வியந்துகொண்டிருக்கும் எனக்குத் தன்னுடைய செயலையும், பெருமையையும், அழகையும் எண்ணும்படி அறிவு நல்கிய இறைவனது கருணை இருந்தவாறு என்னே!' என்று வியந்தபடி, 'அற்புதம் அறியேனே' என்றது. இறைவனது அருட்செயலை அதில் அழுந்தி நின்று அனுபவிக்கலாமேயன்றி வேறு நின்று அறிதலோ சொல்லுதலோ முடியாது என்றபடி. இதனால், இறைவன் அறிவை நல்கி ஆட்கொள்ள வல்லவன் என்பது கூறப்பட்டது. 10 திருச்சிற்றம்பலம்
|