பக்கம் எண் :

திருவாசகம்
598


அழகிய திருப்பெருந்துறை அரசனும் ஆகிய, ஏதிஇல் - குற்றமில்லாத, பெரும்புகழ் - பெரும் புகழையுடைய, எங்கள் ஈசன் - எங்கள் ஆண்டவன், இரு - பெரிய, கடல் வாணற்கு - கடலில் வாழ்பவனாகிய வருணனுக்கு, தீயில் தோன்றும் - நெருப்பில் தோன்றிய, ஓவிய மங்கையர் - சித்திரம் போன்ற பெண்களுடைய, தோள் புணரும் - தோள்களைத் தழுவிய, உரு அறிவார் - உருவத்தின் தன்மையை அறிய வல்லவர்கள், எம்பிரான் ஆவார் - எமக்குத் தலைவர் ஆவார்கள்.

விளக்கம் : புலி என்றது தாருகாவனத்து முனிவர்கள் அனுப்பிய புலியை. புலியைக் கொன்று தோலை ஆடையாகப் போர்த்த பேராற்றலுடைய பெருமான், கடல்வாணற்காக மங்கையர் தோளைச் சேர்ந்தருளினான் என்றார். இவ்வரலாறு விளங்கவில்லை.

இதனால், இறைவன் அன்பர்களுடன் உறவு கொள்வான் என்பது கூறப்பட்டது.

8

தூவெள்ளை நீறணி எம்பெருமான்
சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன்
தென்னன் பெருந்துறை யாளியன்று
காதல் பெருகக் கருணைகாட்டித்
தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளுங்
கிடப்பறி வாரெம்பி ரானாவாரே.

பதப்பொருள் : தூ - தூய்மையான, வெள்ளை நீறு அணி - திருவெண்ணீற்றையணிந்த, எம்பெருமான் - எம்பிரானும், சோதி - ஒளியையுடைய, மகேந்திரநாதன் - மகேந்திர மலைக்குத் தலைவனும், தேவர் வந்து தொழும்பதம் - தேவர்கள் வந்து வணங்கும்படியான தனது திருவடியை, வைத்த - அடியார்கள்மேல் வைத்தருளிய, ஈசன் - ஆண்டவனும், தென் நல் - அழகிய நல்ல, பெருந்துறையாளி - திருப்பெருந்துறையை ஆள்பவனும் ஆகிய இறைவன், அன்று - அக்காலத்தில், காதல் பெருக - எனக்கு அன்பு மிகும்படி, கருணை காட்டி - திருவருள் புரிந்து, தன் கழல் காட்டி - தனது திருவடியைக் காட்டியருளி, கசிந்து உருக - மனம் நைந்து உருகும்படி, கேதம் கெடுத்து - துன்பத்தை ஒழித்து, என்னை ஆண்டருளும் - என்னை ஆட்கொண்டருளின, கிடப்பு அறிவார் - திருவுள்ளக் கிடக்கையை அறிய வல்லவர்கள், எம்பிரான் ஆவார் - எமக்குத் தலைவர் ஆவார்கள்.

விளக்கம் : பேரூழிக் காலத்தில் எல்லா உலகங்களும் சாம்பலாக, அதனையே சிவபிரான் தனது திருமேனியில் அணிவதால், 'தூவெள்ளை நீறணி எம்பெருமான்' என்றார். அங்ஙனமுள்ள பெருமான் மகேந்திர மலையை விட்டு இறங்கித் திருப்பெருந்துறைக்கு வந்து தமது துன்பத்தினைப் போக்கி