பக்கம் எண் :

திருவாசகம்
602


இன்பே அருளி எனைஉருக்கி
உயிருண் கின்ற எம்மானே
நண்பே அருளாய் என்னுயிர்
நாதா நின்னருள் நாணாமே.

பதப்பொருள் : என்பே உருக - எனது எலும்புகளெல்லாம் உருகும்வண்ணம், நின் அருள் அளித்து - உனது திருவருளைத் தந்து, உன் - உன்னுடைய, இணைமலர் - இரண்டு தாமரை மலர் போன்ற, அடி காட்டி - திருவடியைக் காட்டி, முன்பே - முன்னமே, என்னை ஆண்டுகொண்ட - என்னை ஆட்கொண்ட, முனிவா - முனிவனே, முனிவர் முழுமுதலே - முனிவர்கட்கெல்லாம் முதற்பொருளானவனே, இன்பே அருளி - பேரின்பமே கொடுத்தருளி, எனை உருக்கி - என்னை உருகுவித்து, உயிர் உண்கின்ற - எனது பசுபோதத்தை நீக்குகின்ற, எம்மானே - எங்கள் பெரியோனே, என் உயிர் நாதா - எனது உயிர்த்தலைவனே, நின் அருள் - உன்னுடைய திருவருளால், நாணாமே - கூசாமல், நண்பு அருளாய் - உன்னுடைய நட்பை எனக்கு அருள் செய்ய வேண்டும்.

விளக்கம் : 'முன்பு உனது திருவருளால் என் முன் தோன்றி ஆட்கொண்ட நீ, இப்பொழுது என்னை உன்னோடு சேர்த்துக்கொள்ள ஏன் தயங்க வேண்டும்?' என்பார், 'முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா' என்றும், 'இனித் தியக்கமின்றி என்னை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்' என்பார். 'நாணாமே நண்பே அருளாய்' என்றும் கூறினார், 'தடையின்றி உனது சேர்க்கையை இப்பொழுதே அருள வேண்டும்' என்ற எண்ணத்தைத் தெரிவித்தபடி.

இதனால், இறைவன் பசுபோதத்தைப் போக்கிப் பேரின்பம் நல்குவான் என்பது கூறப்பட்டது.

3

பத்தில னேனும் பணிந்தில
னேனும்உன் உயர்ந்தபைங் கழல்காணப்
பித்தில னேனும் பிதற்றிலனேனும்
பிறப்பறுப் பாய்எம் பெருமானே
முத்தனை யானே மணியனை
யானே முதல்வ னேமுறையோஎன்
றெத்தனை யானும் யான்தொடர்ந்
துன்னை இனிப்பிரிந் தாற்றேனே.

பதப்பொருள் : எம்பெருமானே - எம்பிரானே, முத்து அனையானே - முத்துப் போன்றவனே, மணி அனையானே - மாணிக்கத்தைப் போன்றவனே, முதல்வனே - தலைவனே, முறையோ என்று - முறையோ என்று, எத்தனையானும் - எவ்வளவாயினும், யான் உன்னைத் தொடர்ந்து - நான் உன்னைப் பற்றித் தொடர்ந்து, இனிப் பிரிந்து ஆற்றேன் - இனிமேல்