பக்கம் எண் :

திருவாசகம்
617


பேரின்பப்பித்தினை உண்டாக்குகின்ற, அத்தன் - தலைவனாவான், பெருந்துறையான்தான் - திருப்பெருந்துறைப் பெருமான் ஒருவனே, என்பர் - என்று தெளிகின்றவர், ஆர் ஒருவர் - எவர் ஒருவர்? அவரை, தாழ்ந்து - பணிந்து, ஆர்க்கோ - ஆரவாரிப்பேனோ! அரற்றுகோ - அலறுவேனோ! - ஆடுகோ - ஆடுவேனோ! பாடுகோ - பாடுவேனோ! என் செய்கேன் - என்ன செய்து பாராட்டுவேன்?

விளக்கம் : சிவபெருமான் ஒருவனே அன்பையும், இன்பத்தையும் அருள வல்லவன் என்று தெளிந்த சிவஞானிகளிடத்தில் தமக்கு உள்ள ஆர்வத்தை அடிகள் இத்திருவெண்பாவில் விளக்கியுள்ளார்.

"இருவரால் அறிய ஒண்ணா எம்பிரான் தம்பி ரானாம்
திருவுரு வன்றி மற்றோர் தேவர்எத் தேவர் என்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே"

என்று அடிகள் சிவபெருமானையன்றிப் பிற தெய்வங்களைக் கொண்டாடுபவர்களைக் கண்டு தாம் அஞ்சுவதாகக் கூறினார்; இங்கு, சிவபெருமானது பெருமையை அறிந்தவர்களிடத்தில் தமக்கு உண்டாகின்ற அன்பினைக் கூறினார். அடியாரிடத்தில் அன்புடையவர்களே இறைவனிடத்தில் அன்புடையவராவர் என்பதை.

"ஈசனிடத் தன்பில்லார் அடியவர்க் கன்பில்லார்"

என்ற சிவஞான சித்தியால் அறிக.

இதனால், இறைவனை உணர்ந்த பெரியோர்களிடத்தில் அன்புகூர வேண்டும் என்பது கூறப்பட்டது.

2

செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் - வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்.

பதப்பொருள் : சேவடியே கைதொழுது - எம்பெருமானது சிவந்த திருவடியையே கை கூப்பி வணங்கி, உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் - பிழைக்கும் வழியின் தோற்றத்தையும் யான் அறிந்திலேன்; ஆயினும், பெருந்துறையில் மேயபிரான் - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய பெருமான், வையத்து - உலகி்ன் கண்ணே, உறையுள் இருந்த வேல் - உறைக்குள் வைத்திருந்த வேலினை, என் சிந்தனைக்கே - என் சித்தத்திலே, மடுத்துக் கோத்தான் - அழுத்திப் பாய்ச்சிவிட்டான்; அங்ஙனம் செய்தற்குச் செய்த, பிழை அறியேன் - நான் செய்த தவற்றினை அறியேன்.