பதப்பொருள் : சீலம் இன்றி - நல் ஒழுக்கமில்லாமலும், நோன்பு இன்றி - விரதமில்லாமலும், செறிவு இன்றி - அன்பில்லாமலும், அறிவு இன்றி - அறிவுஇல்லாமலும், தோலின் பாவை - தோற்பாவையின், கூத்தாட்டு ஆய் - கூத்தாட்டத்தைப் போன்று, சுழன்று விழுந்து கிடப்பேனை - சுற்றி அலைந்து பயனின்றிக் கிடக்கின்ற என்னை, மாலும் காட்டி - மயக்கம் இன்னது என்று காட்டி, வழிகாட்டி - அதனின்றும் விலகும் வழியைக் காட்டி, வாரா உலக நெறி ஏற - வீட்டுலகத்தை அடையும் வழியை அடியேன் பெற, கோலம் காட்டி - அழகிய வடிவத்தைக் காட்டி, ஆண்டானை - ஆண்டருளினவனை, கொடியேன் - கொடுமையையுடைய யான், கூடுவது என்றோ - அடைவது எந்நாளோ! விளக்கம் : 'தோற்பாவைக்குக் கூத்தினால் பயன் ஒன்றும் இல்லை; அதைப் போலப் பயனற்றுக் கிடக்கின்றேன்' என்பார், 'தோலின்பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை' என்றார். 'சீலம் நோன்பு செறிவு அறிவு ஆகியவை இறை நெறியிற் செல்வார்க்குரிய தகுதிகளாம். 'இவற்றுள் ஒன்றும் இல்லாத எனக்கும் இறைவன் குருவாய்த் தோன்றி நெறி காட்டியருளினான்' என்பார், 'வாரா உலக நெறியேறக் கோலங் காட்டி ஆண்டான்' என்றார். அங்ஙனம் அருளிய இறைவனை அடைவது எப்போது என்ற விருப்பம் தெரிவித்தவாறாம். இதனால், இறைவனது கருணை மிகுதி கூறப்பட்டது. 3 கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய் படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே கெடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே. பதப்பொருள் : கேடு இலதாய் - கேடில்லாதவனே, கெடுவேன் - கெடும் இயல்புடைய யான், கெடுமா கெடுகின்றேன் - கெடும் வழியில் சென்று கெடுகின்றேன்; இதனால், பழிகொண்டாய் - நீ பழியை உடைய என்னை அடைந்தாய்; படுவது எல்லாம் - பட வேண்டிய துன்பங்களை எல்லாம், நான் படுவேன் - நான் பட இருக்கின்றேன்; பட்டால் - அவ்வாறு படுவேனாயின், பின்னை - பிறகு, பயன் என்ன - நீ அடையும் பயன் யாது? கொடு மாநரகத்து அழுந்தாமே - கொடிய பெரிய நரகத்தில் அழுந்தாதபடி, காத்து ஆட்கொள்ளும் - பாதுகாத்து ஆட்கொள்ளுகின்ற, குருமணியே -
|