மேலான குரவனே, எங்கள் நாயகமே - எங்கள் தலைவனே, நடுவாய் நில்லாது ஒழிந்தக்கால் - நேர்மையாய் இல்லாது போய்விட்டால், நன்றோ - உனக்கு அழகாகுமோ? விளக்கம் : 'இறைவன் குருவாய் வந்து ஆட்கொண்ட போது உடன் செல்லாது பின்தங்கினமையால், இங்கு வினைகளைச் செய்து வேதனைப்படுகிறேன்' என்பார், 'கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்' என்றார். ஆட்கொண்ட பெருமான் முத்திப்பேறு அளிக்காமையால், 'பழி கொண்டாய்' என்றார். 'நடுவாய் நில்லாது' என்றது தம்மைப் பின் நிறுத்தி ஏனைய அடியார்களை உடன் அழைத்துச் சென்றமையை நினைவுகூர்ந்து கூறியது. நடுவு நிலைமையில் நின்று என்னையும் அழைத்துக்கொண்டருள வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்தவாறாம். இதனால், இறைவன் துன்பத்தைப் போக்க வல்லவன் என்பது கூறப்பட்டது. 4 தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனித்தான் நல்குதியே தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ யென்பா லில்லையே நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ. பதப்பொருள் : தாயாய் முலையைத் தருவானே - எல்லாவுயிர்கட்கும் தாயாகி முலைப்பாலூட்டி வளர்ப்பவனே, தாராது ஒழிந்தால் - எனக்கு மட்டும் பால் கொடாது போனால், சவலையாய் - தாய்ப்பாலில்லாத சவலைக் குழந்தையாய், நாயேன் கழிந்து போவேனோ - நாயனையேன் வீணாய்ப் போவது முறையோ? நம்பி - அண்ணலே, இனித்தான் - இனியாவது, நல்குதியே - அருளமாட்டாயா? தாயே என்று - உன்னைத் தாயே என்று கருதி, உன் தாள் அடைந்தேன் - உன் திருவடியை அடைந்தேன்; நீ என்பால் தயா இல்லையே - நீ என்னிடத்தில் கருணையுடையவனாய் இல்லையா? நாயேன் - நாய் போன்ற யான், அடிமை உடனாக - அடிமையாக உன்னுடன் இருக்கும்படி, ஆண்டாய் - முன்பு ஆட்கொண்டாய்; நான்தான் வேண்டாவோ - இப்பொழுது நான் உனக்கு வேண்டுவதில்லையோ? விளக்கம் : 'சவலைக்குழந்தை தாய்ப்பால் இல்லாது மெலிந்து வருந்தும்; அதைப் போல வருந்துவேனோ?' என்பார், 'சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ?' என்றார். இனி, 'குருந்த
|