பக்கம் எண் :

திருவாசகம்
65


3. திருவண்டப்பகுதி
(தில்லையுள் அருளிச் செய்யப்பட்டது)

சிவனது தூல சூக்குமத்தை வியந்தது.

இணைக்குறள் ஆசிரியப்பா

திருச்சிற்றம்பலம்

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன;

5 இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச்
சிறிய வாகப் பெரியோன் தெரியின்,
'வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்

10. சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்
தெறியது வளியிற்
கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும்
படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போற் காக்குங் கடவுள் காப்பவை

15. கரப்போன் கரப்பவை கருதாக்
கருத்துடைக் கடவுள்; திருத்தகும்
அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன்; நாடொறும்

20. அருக்கனிற் சோதி அமைத்தோன்; திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன்; திண்திறல்
தீயின் வெம்மை செய்தோன்; பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன்; மேதகு
காலின் ஊக்கம் கண்டோன்; நிழல்திகழ்