பக்கம் எண் :

திருவாசகம்
67


கண்ணால் யானும் கண்டேன் காண்க!
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க!

60. கருணையின் பெருமை கண்டேன் காண்க!
புவனியிற் சேவடி தீண்டினன் காண்க!
சிவனென யானுந் தேறினன் காண்க!
அவனெனை ஆட்கொண் டருளினன் காண்க!
குவளைக் கண்ணி கூறன் காண்க!

65. அவளும் தானும் உடனே காண்க!
பரமா னந்தப் பழங்கட லதுவே
கருமா முகிலின் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய

70. ஐம்புலப் பந்தனை வாளர விரிய
வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
நீடெழில் தோன்றி வாளொளி மிளிர
எந்தம் பிறவியில் கோப மிகுத்து
முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்

75. பூப்புரை யஞ்சலி காந்தள் காட்ட
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்
கேதக் குட்டங் கையற வோங்கி
இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை

80. நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணம்
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
அவப்பெருந் தாப நீங்கா தசைந்தன;
ஆயிடை, வானப் பேரியாற் றகவயிற்
பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்

85. சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித்
தூழூழ் ஓங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந்
துருவ அருள்நீர் ஓட்டா அருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்

90. வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில்
மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்