பக்கம் எண் :

திருவாசகம்
70


160. றருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில்
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்;
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்;
சொல்லுவ தறியேன்; வாழி! முறையோ?
தரியே னாயேன்; தான்எனைச் செய்தது

165. தெரியேன்; ஆவா! செத்தேன்! அடியேற்
கருளிய தறியேன்; பருகியும் ஆரேன்;
விழுங்கியும் ஒல்ல கில்லேன்;
செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்
துவாக்கடல் நள்ளுநீ ருள்ளகந் ததும்ப

170. வாக்கிறந் தமுத மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன்; கொடியே னூன்தழை
குரம்பு தோறும் நாயுட லகத்தே
குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்

175. எற்புத் துளைதொறும் ஏற்றினன்; உருகுவ
துள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக்
கள்ளூ றாக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
என்னையுய்ம இருப்ப தாக்கினன்; என்னிற்

180. கருணை வான்தேன் கலக்க
அருளொடு பராவமு தாக்கினன்
பிரமன்மா லறியாப் பெற்றி யோனே.

திருச்சிற்றம்பலம்