பக்கம் எண் :

திருவாசகம்
83


என்பார். ‘காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு’ என்றார். அன்பரல்லாதார்க்கு எளிதில் வந்து அருள மாட்டான் என்பார். ‘ஏதிலர்க்கேதில் எம் இறைவன்’ என்றார்.

இதனால் வாழ்த்துக் கூறப்பட்டது.
நச்சர வாட்டிய நம்பன் போற்றி
பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்

110. நிற்பன நிறீஇச்
சொற்பதம் கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்
கண்முதற் புலனால் காட்சியு மில்லோன்
விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்

115. பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும்
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
இன்றெனக் கெளிவந் தருளி
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
இன்றெனக் கெளிவந் திருந்தனனன் போற்றி

120. அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி
ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்

பதப்பொருள் : நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி - நஞ்சை யுடைய பாம்பை ஆட்டிய நம்பெருமானுக்கு வணக்கம்; எமைப்பிச்சு ஏற்றிய பெரியோன் போற்றி - எம்மைத் தனது அருட்பித்தேற்றின பெரியவனுக்கு வணக்கம்; நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி - திருவெண்ணீற்றுப் பூச்சொடு தோன்ற வல்லவனுக்கு வணக்கம்; நாற்றிசை - நான்கு திக்கிலும், நடப்பன நடாஅய் - நடப்பவற்றை நடத்தி, கிடப்பன கிடாஅய் - கிடப்பவற்றைக் கிடத்தி, நிற்பன நிறீஇ - நிற்பவற்றை நிறுத்தி, சொல்பதம் கடந்த தொல்லோன் - சொல்லளவைக் கடந்த பழையோன், உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன் - மன உணர்ச்சியால் கொள்ளப் படாதவன்; கண்முதல் புலனால் காட்சியும் இல்லோன் - கண் முதலாகிய பொறிகளுக்குக் காணவும் படாதவன்; விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன் - ஆகாயம் முதலிய பூதங்களை வெளிப்படையாகத் தோன்றப் படைத்தவன்; பூவில் நாற்றம் போன்று - மலரின் மணம் போன்று, உயர்ந்து - ஓங்கி, எங்கும் - எவ்விடத்தும், ஒழிவு, அற நிறைந்து -