இதனால், இறைவனுக்கு வணக்கம் கூறப்பட்டது. மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் 125. மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும் முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத் துற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும் 130. மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் இத்தந் திரத்திற் காண்டுமென றிருந்தோர்க் கத்தந் திரத்தி னவ்வயி னொளித்தும் முனிவற நோக்கி நனிவரக் கவ்வி ஆணெணத் தோன்றி அலியெனப் பெயர்ந்து 135. வாணுதற் பெண்ணென ஒளித்தும், சேண்வயின் ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுயிர் ஆக்கை அருந்தவர் காட்சியுள் திருந்த வொளித்தும் ஒன்றுண் டில்லை என்றறி வொளித்தும் 140. பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம் ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலின் தாள்தளை யிடுமின் சுற்றுமின்! சூழ்மின் தொடர்மின் விடேன்மின் 145. பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும் பதப்பொருள் : மரகதம் குவால் மாமணி பிறக்கம் - பச்சை மணியின் குவியலும் சிறந்த செம்மணியின் பெருக்கமும், மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ - மின்னலின் ஒளியைத் தன்னிடத்தே கொண்ட ஒரு பொன்னொளி போல் விளங்க, திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் - மேலும் கீழும் போய்த் தேடின பிரமனுக்கும் திருமாலுக்கும் மறைந்தும், முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் - யோக முறைப்படி ஒன்றி நின்று முயன்றவர்க்கு மறைந்தும், ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து - ஒருமைப்பாடு கொண்டு நோக்குகின்ற மனத்தையுடைய, உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும் - உறவினர் வருந்தும்படி உறுதியோடு இருப்பவர்க்கு மறைந்தும், மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் - வேதங்களின் பொருட்கூறுபாடுகளை ஆராய்ந்து பார்த்து வருந்தினவர்க்கு மறைந்தும், இத்தந்திரத்தின் காண்டும் என்று இருந்தோர்க்கு - இவ்வுபயம் வழியாகக் காண்போம் என்று இருந்தவர்க்கு, அத்தந்திரத்தின் - அவ்வுபாயத்தில், அவ்வயின் ஒளித்தும் -
|