பக்கம் எண் :

திருவாசகம்
87


தன்னே ரில்லோன் றானேயான தன்மை
என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி
அறைகூவி யாட்கொண் டருளி
மறையோர் கோலங் காட்டி யருளலும்

150. உளையா அன்பென் புருக வோலமிட்
டலைகடல் திரையின் ஆர்த்தார்த் தோங்கித்
தலைதடு மாற வீழ்ந்துபுரண் டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவும்

155. கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின்
ஆற்றே னாக அவயவஞ் சுவைதரு
கோற்றேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூ ரெழில்நகை யெரியின்
வீழ்வித் தாங்கன்

160. றருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில்
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்.

பதப்பொருள் : தன் நேர் இல்லோன் - தனக்க நிகரில்லாதவன், தானே ஆன தன்மை - தானேயாகிய தன்மையை, என் நேர் அனையோர் கேட்க - என் போல்வார் கேட்கும்படி, வந்து இயம்பி - வந்த சொல்லி, அறை கூவி - வலிந்து அழைத்து, ஆட்கொண்டு அருளி - அடிமை கொண்டருளி, மறையோர் கோலம் காட்டி அருளலும் - வேதியர் கோலத்தைக் காட்டி யருளுதலும், உளையா - வருந்தி, அன்பு என்பு உருக ஓலமிட்டு - அன்பினால் என்புருக முறையிட்டு, அலைகடல் திரையின் - அசைகின்ற கடல் அலைகள் போல, ஆர்த்து ஆர்த்து - இடையறாது ஆரவாரித்து, ஓங்கி - மேலெழுந்து, தலை தடுமாறா வீழ்ந்து - தலை தடுமாறி வீழ்ந்து, புரண்டு அலறி - புரண்டு அரற்றி, பித்தரின் மயங்கி - பித்தர் போல மயங்கி, மத்தரின் மதித்து - வெறிபிடித்தவர் போலக் களித்து, நாட்டவர் மருளவும் - நாட்டார் மயக்கம் கொள்ளவும், கேட்டவர் வியப்பவும் - கேட்டவர் வியப்புக் கொள்ளவும், கடக்களிறு ஏற்றா - மதயானையும் ஏற்கப்பெறாத, தடப்பெரு மதத்தின் - மிகப்பெரிய மதத்தால், ஆற்றேன் ஆக - தரியேனாக, அவயவம் - என் உறுப்புகளை, சுவைதரு கோல் தேன் கொண்டு செய்தனன் - தீஞ்சுவையினைத் தருகின்ற கொம்புத்தேன் கொண்டு ஆக்கினன், ஏற்றார் - பகைவருடைய, மூதூர் - பழைய ஊராகிய திரிபுரங்களை, எழில் நகை எரியின் வீழ்வித்து ஆங்கு - அழகிய நகையாகிய நெருப்பினால் அழித்தது போல, அன்று - அக்காலத்தில், அருள் பெருந்தீயின் - அருளாகிய பெரிய நெருப்பினால், அடியோம் அடிக்குடில் - அடியோங்களுக்கு