155. மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி குற்றா லத்தெம் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி பாங்கார் பழனத் தழகா போற்றி 160. கடம்பூர் மேவிய விடங்கா போற்றி அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி இத்தி தன்னின் கீழிரு மூவர்க் கத்திக் கருளிய அரசே போற்றி தென்னா டுடைய சிவனே போற்றி 165. எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி ஏனக் குருளைக் கருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி இருள்கெட அருளும் இறைவா போற்றி 170. தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி களங்கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி நஞ்சே யமுதா நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி 175. நித்தா போற்றி நிமலா போற்றி பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி 180. முறையோ தரியேன் முதல்வா போற்றி உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சே ரடியாள் பங்கா போற்றி 185. அலந்தே னாயே னடியேன் போற்றி இலங்கு சுடரெம் மீசா போற்றி கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலைநா டுடைய மன்னே போற்றி
|