பக்கம் எண் :

திருவாசகம்
98


பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றி போற்றி புராண காரண

225. போற்றி போற்றி சயசய போற்றி

திருச்சிற்றம்பலம்

சகத்தின் உற்பத்தி

இவ்வகவலில் அடிகள் இறைவனுக்கு வணக்கம் கூறுகின்றாராகலின், இது, "போற்றித் திருவகவல்" எனப்பட்டது. முதற்கண் உயிர்கள் உடம்பிற் பொருந்துமாறு கூறப்படுதலின், சகத்தின் உற்பத்தி எனக் குறிக்கப்பட்டது. சகம் என்பது, சகத்து (உலகத்து) உயிர்களை.

நான்முகன் முதலா வானவர் தொழுதொழ
ஈரடி யாலே மூவுல களந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்

5. றடிமுடி யறியும் ஆதர வதனிற்
கடுமுரண் ஏன மாகி முன்கலந்
தேழ்தல முருவ இடந்து பின்னெய்த்
தூழி முதல்வ சயசய வென்று
வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்

10. வழுத்துதற் கெளிதாய் வார்கட லுலகினில்

பதப்பொருள் : நான்முகன் முதலா - பிரமன் முதலாக, வானவர் தொழுது எழ - தேவர்கள் யாவரும் தொழுது எழாநிற்க, ஈர் அடியாலே - இரண்டு திருவடிகளாலே, மூ உலகு அளந்து - மூன்று உலகங்களையும் அளந்து, நால்திசை முனிவரும் - நான்கு திக்கிலுள்ள முனிவர்களும், ஐம்புலன் மலர - ஐம்புலன்களும் மகிழும்படி, போற்றி செய் - வணங்கு கின்ற, கதிர்முடி - ஒளி பொருந்திய திருமுடியையுடைய, திருநெடுமால் - அழகிய நெடுமால், அன்று - அந்நாளில், அடிமுடி அறியும் - திருவடியின் முடிவையறிய வேண்டுமென்கிற, ஆதரவு அதனில் - விருப்பத்தால், கடுமுரண் ஏனம் ஆகி - வேகமும் வலிவுமுள்ள பன்றியாகி, முன் கலந்து - முன் வந்து, ஏழ்தலம் உருவ இடந்து - ஏழுலகங்களும் ஊடுருவும்படி தோண்டிச் சென்று, பின் எய்த்து - பின்னே இளைத்து, ஊழி முதல்வ - ஊழியை நடத்தும் முதல்வனே, சயசய என்று - வெல்க வெல்க என்று, வழுத்தியும் - துதித்தும், காணா மலர் அடி இணைகள் - காணப் பெறாத தாமரை மலர் போலும் திருவடிகள், வழுத்துதற்கு எளிதாய் -