18


37. சிவக்கொழுந்து சம்பந்தனான அகோரசிவன்.

38. இராமன் கணபதியான ஞானசிவன்.

39. பிச்சன் வெங்காடனான அகோரசிவன்.

40. மறைக்காடன் நம்பி ஆரூரனான ஞானசிவன்.

41. சோமன் சம்பந்தனான ஞானசிவன்.

42. சத்தி திருநாவுக்கரையனான ஈசானசிவன்.

43. பொற்சுவரன் நம்பியாரூரனான தர்மசிவன்.

44. ஆச்சன் திருநாவுக்கரையனான நேத்திரசிவன்.

45. ஐயாறன் பெண் ஓர் பாகனான இருதயசிவன்.

46. இராசாதித்தன் அம்பலத்தாடியான சிகாசிவன்.

47. செல்வன்கணபதி தெம்பனான தர்மசிவன்.

48. தில்லைக் கூத்தனான ஞானசிவன்

உடுக்கை கொட்டிமத்தளம் வாசித்தவர்களின் பெயர்கள்:

உடுக்கை   வாசித்தவன்  துவைதகோமபுரத்து  தத்யக்கிரமவித்தன்
மகன்   சூரியதேவக்   கிரமவித்தனான  ஆலால  விடங்க  உடுக்கை
விச்சாதிரனான சோமசிவன்.

(வேதத்தை  ஓதும்முறை  சம்ஹிதா,  பதம்,  கிரமம், கனம்,  ஜடா
என்று   ஐந்துவகைப்படும்.  இவைகளில்  கிரமம்  என்ற  முறைப்படி
வேதத்தை ஓதியவன் கிரமவித்தன்.)

கொட்டிமத்தளம்  வாசித்தவன் குணப்புகழ்  மருதனான சிகாசிவன்.

இங்குக் குறிக்கப்பெற்றுள்ள ஐம்பது பெயர்களின் இறுதியில் உள்ள
அகோரசிவன்,  இருதயசிவன்,  ஈசானசிவன், ஓங்காரசிவன், கவசசிவன்,
சத்தியசிவன்,   சிகாசிவன்,    சோமசிவன்,  ஞானசிவன்,  தர்மசிவன்,
தத்புருஷசிவன்,    நேத்ரசிவன்,      பூர்வசிவன்,  மனோத்தமசிவன்,
யோகசிவன்,  ருத்ரசிவன், வாமசிவன்,  விஞ்ஞானசிவன்  என்பவைகள்
சிவதீட்சை செய்விக்கப்பெற்ற காலை வைக்கப்பட்ட பெயர்கள்.

முதற்பெயர்,  இரண்டாம்பெயர், இவைகளிலுள்ள இராசராசப்பிச்சன்,
தட்சிணமேரு  விடங்கப்பிச்சன்  இவைகள்  பட்டப்பெயர்கள்.  பாலன்
திருவாஞ்சியத்தடிகள்,      திருவெண்ணாவல்      செம்பொற்சோதி,
பட்டாலகன்  அம்பலத்தாடி,  பட்டாலகன் சீருடைக்கழல் முதலானவை
இயற் பெயர்கள்.