பக்கம் எண் :

திருமுறை]12. திரைலோக்கிய சுந்தரம்85


129. 

அரும்பேதைக் கருள்புரியா தொழிந்தாய் ; நின்
                                [அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிரீர்ந்தாய் ; நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.

 

130. 
 

ஆறாத பேரன்பி னவர்உள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி ; அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய
                                 [சுந்தரனே.   (9)
 

‘காட்டா’     என்றே  பாடம்  ஓதுதலும்  ஆம்.       இவ்வடிக்கும்,
‘‘உருக்காட்டாய்’’  எனப்  பின்வருகின்ற அதன் பொருளே பொருளாக
இறைவற்கு  ஏற்றி  உரைப்பாரும்  உளர்.  ‘பூஞ்சாய்க் காட்டாய்’ என
ஓதுவார்  பாடம்  பாடம் அன்று, ‘சோதியாகிய எழில்’ என்க. என்றது.
அதனையுடைய,   உருவத்தைக்  குறித்தது.  ‘‘இவளுடைய’’  என்பது,
‘‘கண்’’ என்றதனோடும் இயையும். செஞ்சாலி-செந்நெற் பயிர்.

129.     ‘‘நளிர்   புரிசை’’   என்பது   முதலாகத்    தொடங்கி,
‘‘அரும்பேதைக்கு  அருள்புரியாதொழிந்தாய்’’ என்றதனை இறுதிக்கண்
வைத்து,  ‘இஃது  உனக்கு அழகோ’ என்னும் குறிப்பெச்சம் வருவித்து
முடிக்க.

‘‘பேதை’’     என்பது,  ‘பெண்’  என்னும்  அளவாய்    நின்றது.
‘இவ்வரும்பேதை’    எனச்    சுட்டு    வருவித்துரைக்க.   அருமை,
பெறுதற்கருமை.  ‘‘நரம்பு’’  என்றது,  அதனினின்று  எழும் இசையை.
சிவபெருமான்    வீணை   வாசித்தலை,   ‘‘வேயுறு   தோளிபங்கன்,
விடமுண்ட  கண்டன்,  மிகநல்ல  வீணை  தடவி’’ (திருமுறை-2.85.1)
என்பதனானும் அறிக. உயிரை ஈர்தலாவது உடம்பினின்றும் பிரித்தல்.
‘‘உயிர்     ஈரும்வாளது’     (குறள்-334)    என்புழியும்,    ஈர்தல்
இப்பொருட்டாதல்  அறிந்துகொள்க.  நளிர்-குளிர்ச்சி  ; இஃது அகழி
நீரால்    ஆவது.   வனம்-நந்தவனம்.   புரிசை   வனம்-புரிசையாற்
சூழப்பட்ட  வனம்.  ‘பாதிரியம்  போது’ என்பது, தொகுத்தல் பெற்று,
‘பாதிரம் போது’ என நின்றது.

130.     ஆறாத-தணியாத.  அன்பு  காதலாய்  முறுகிய  ஞான்று
கனல்போல்  உள்ளத்தைக்  கவற்றுதலின், ‘‘ஆறாத அன்பு’’ என்றாள்.
‘‘அன்பினவர்’’ என்றதில், இன்னும்,