இங்ஙனம் முதலாம் இராசராசசோழன் தளிச்சேரிப் பெண்டுகளைக் குடியேற்றி அவர்களுக்கு நிவந்தம் அளித்ததோடு அமையாது, அவர்களின் தொண்டுகளைக் கண்காணிக்க ஒருவரையும் நியமித்து அவர்க்கும் நிவந்தம் அளித்துள்ளான். இச்செய்தி “தளிச்சேரிப் பெண்டுகளுக்கும், காந்தர்விகளுக்கும் நாயகஞ் செய்ய சாவூர் பரஞ்சோதிக்குப் பங்கு இரண்டு ’’ என்னும் கல்வெட்டுப்பகுதி அறிவிக்கின்றது. தளிச்சேரிப் பெண்டுகளுக்கு அளித்த நிவந்தங்களை உணர்த்தும் கல்வெட்டின் பகுதிகளில், சோழமண்டலத்து ஊர்களில் வழக்கில் அதிகமாகப் பயிலப்பெறாத சிலகோயில்கள் புலப்படுகின்றன. அவைகள் அம்பரில் முதுபகவர்தளி,அரபுரத்தில் நிகளங்க ஈஸ்வரம்; ஆயிரத்தளியில் மல்லீஸ்வரம்; கடம்பூரில் இட்டாச்சி ஈஸ்வரம்; நந்தீஸ்வரம்; கோட்டூரில் குணவதி ஈஸ்வரம், பஞ்சவன்மாதேவீஸ்வரம்; தஞ்சாவூரில் எரியூர் நாட்டுத்தளி, ஜயபீமதளி, பிரமகுட்டம்; திருவாரூரில் அருமொழி ஈஸ்வரம், உலகீஸ்வரம், பிரஹமீஸ்வரம், மட்டைத் தென்தளி; நியமத்தில் அரிகுலகேசரி ஈஸ்வரம், சந்திரமல்லி ஈஸ்வரம், நிருபகேசரி ஈஸ்வரம், நன்னிலத்தில் அமலீஸ்வரம், திருமேற்றளி; நாகப்பட்டினத்தில் நடுவில்தளி, பழுவூரில் பகைவிடை ஈஸ்வரம்; பழையாறையில் அரையெருமான்தளி, சங்கீஸ்வரம்; பாச்சிலில் திருமேற்றளி, திருவமலீஸ்வரம்; பாம்புணியில் திருப்பாதாள ஈஸ்வரம், விடையபுரத்தில் திருப்புகழீஸ்வரம் முதலான கோயில்களாம். இப்பகுதியில் சரித்திரத்துக்குப் பயன்படும் சில செய்திகள்: 1, திருக்காரோணத்து நக்கன் ராசகேசரிக்குப் பங்கு ஒன்றும் (para 10). 2. முப்பத்தேழாம் வீடு தஞ்சாவூர் எரியூர் நாட்டுத்தளி நக்கன் மாதேவடிகளுக்குப் பங்கு ஒன்றும் (Para 131). 3, இருபத்தொன்பதாம் வீடு இத்தளிநக்கன் குந்தவைக்குப் பங்கு ஒன்றும் (para 2 5). 4. ஐம்பதாம்வீடு இத்தளிநக்கன் அருமொழிக்குப் பங்கு ஒன்றும் (Para 236) என்னும் தொடர்களில் இராசகேசரி, மாதேவடிகள், குந்தவை, அருமொழி என்னும் பெயர்கள் வந்துள்ளன. இவைகளில் இராசகேசரி என்பது முதலாம் இராசராசனுடைய பட்டப்பெயர். மாதேவடிகள் என்பது முதலாம் இராசராசசோழனின் மகளாரின் பெயர். குந்தவை என்பது இராசராசனுடைய அரும் |