படும் மாலை பிடிப்பவர். விளக்குடையார் என்பவர் விளக்கு ஏற்றுபவர் (lamp lighters) நீர்த் தெளியான் என்பவர் நீர்த்தெளிப்பவர். வண்ணத்தார் என்பவர் வண்ணார். இவர்களுக்கு ஈரங்கொல்லிகள் என்ற வேறு பெயரும் உண்டு. இச்செய்தி “வண்ணத்தார்கள் இருவர்க்குப்பேரால் பங்கு ஒன்றாக இத்தெருவில் ஈரங்கொள்ளிகளுக்குப் பங்கு இரண்டும்’’ என்னும் கல்வெட்டுத் தொடர் சான்று பகரும். இங்கே கொள்ளிகள் என்பது கொல்லிகள் என்றிருக்க வேண்டும். காவிதிமை செய்வார் என்பவர் கணக்கு வேலை செய்பவர். (one who performs the duty of accountant). திரு என்பவர் சோதிடர், இச்செய்தி ‘ திரு ஒருவனுக்கும் கீழாள் இரண்டுக்கும் துணையன் ஆதித்தனான செம்பியன் கொற்றப் பெருங்கணிக்குப் பங்கு இரண்டும், மேற்படி ஒருவனுக்கும், கீழாள் இரண்டுக்கும் பராந்தகன் பாண்டி குலாசனி ஆன ராஜராஜஹணிதாதி ராஜனுக்குப் பங்கு இரண்டும்’ ‘என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியலாம். இத்தொடர்களில் வந்துள்ள கணி என்னும் சொல் சோதிடன் என்னும் பொருளில் வந்துள்ளது. “விளைவெல்லாம் கண்ணியுரைப்பான் கணி ’’ என்பது புறப்பொருள் வெண்பாமாலை. எனவே திரு என்ற சொல் பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோதிடர் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளமை அறியப்படும். இக்காலம் இச்சொல் இப்பொருளில் வழக்கில் இல்லை. தய்யான் என்பவன் தையற்காரன். பாணர் என்பார் பாடவல்ல சாதியார். கல்வெட்டுத்துறையாளர் தையல்காரன் என்பர். அப்பொருள் உண்டெனினும் இங்கு அது பொருந்துவதாய் இல்லை. முன்னரே தையற்காரரைக் குறிப்பிட்டு விட்டபடியாலும், பாணரில் ஒருவர் பெயர் குறிக்கவந்தவிடத்து “பாணன் உத்தமன் சூற்றியான அரிகுலகேசரி சாக்கைக்குப் பங்கு ஒன்றரை’’ என்பதில் சாக்கைக்கு என்றிருப்பதாலும், பாடலுடன் கூத்து நிகழ்த்துபவரை உணர்த்துவதாகும். வங்கியம் வாசிப்பார் என்பவர் ஒருவகைக் குழல் வாசிப்பவர். சன்னாலியன். சன்னை என்னும் ஒருவகைப் பெருமுரசு வாசிப்பவரா (அ) வேறா என்பது புலப்படவில்லை. கோலினமை செய்வார் என்பதற்கு இக்காலம் பொருள் விளங்கவில்லை. மேற்குறித்த இவர்களுக்கு நிவந்தமாகப் பங்கு செய்தபடி, பங்கு வழி பங்கு ஒன்றினால், நிலம் வேலியினால் இராசகேசரியோடொக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் நெல் நூற்றுக் |