ஆவர். (மாணிகள்_ பிரமசாரிகள்) முதலாம் இராசராசசோழன் கட்டளைப்படி இவர்களை இட்டவர்:- 1, அருமொழி தேவ வளநாட்டு,நென்மலிநாட்டு நெடுமணலாகிய மதனமஞ்சேரி சதுர்வேதி மங்கலம், குன்றியூர், சுறான்குடி, ஆற்றூர்; - வளநாட்டுப் புறங்கரம்பை நாட்டுப் பல்லவன் மாதேவி சதுர்வேதி மங்கலம், செம்பியன்மாதேவி சதுர்வேதிமங்கலம், பெரும்பல மருதூர், களப்பாழ், சிங்களாந்தகச் சதுர்வேதிமங்கலம், அருமொழிதேவ சதுர்வேதி மங்கலம், கெழுவத்தூர், கோயிலூர் புதுக்குடியாகிய கோதண்டராம சதுர்வேதி மங்கலம், வங்கநகர், கொற்றவன்குடி, பனையூர்; -வளநாட்டு வெண்டாழை வேளூர்க் கூற்றத்து குறும்பலூர், கொண்ணூர்; ஆர்வலக் கூற்றத்து ஆர்வலம், வலிவலம், மாலினூர், அறிஞ்சிகை சதுர்வேதிமங்கலம்; - வளநாட்டுப் புலியூர் நாட்டு ...........(ஊரின் பெயர் சிதைந்து விட்டது); 2, க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுக் குடவாயில்,நாலூர்,மருகல், தானத்தொங்கல்,சதுர்வேதி மங்கலம்; - வளநாட்டு முழையூர் நாட்டுக் குந்தவைச் சதுர்வேதிமங்கலம்; 3, உய்யக்கொண்டார் வளநாட்டுத் தண்டத்தோட்டமான மும்மடிசோழ சதுர்வேதிமங்கலம்; - வளநாட்டுப் பாம்பூர் நாட்டுத் திருக்குடமூக்கில்; - வளநாட்டு, அம்பர் நாட்டு அம்புறத்தூர், அவ்வைநல்லூர்: - வளநாட்டு வெண்ணாட்டுத் திருமழலை, கேரளாந்தகச் சதுர்வேதிமங்கலம், வைகலாகிய வானவன்மாதேவி சதுர்வேதிமங்கலம்; - வளநாட்டுத் திரைமூர் நாட்டு ...........(ஊரின் பெயர் சிதைந்து விட்டது) நல்லூர் புதுக்குடி, வழகூர், அக்கரூர்; - வளநாட்டு விளைநாட்டு விளை நகராகிய நித்த விநோத சதுர்வேதிமங்கலம், பெருமுளை, பறியலூர்; - வளநாட்டு ஆக்கூர் நாட்டு இராசேந்திர சிம்ம சதுர்வேதிமங்கலம், திருக்கடவூர், தலைச்சங்காடு; - வளநாட்டுக் குறும்பூர்நாட்டுக் காயாக்குடி, தளிச்சேரியான பராந்தகசோழ சதுர்வேதிமங்கலம், குறும்பபுறத்தூர், திருவிடைக்கழி; 4. இராசேந்திர சிங்கவளநாட்டுப் பொய்கைநாட்டுக் கண்டராதித்த சதுர்வேதிமங்கலம், பெரும்புலியூர்; - வளநாட்டு மிறைக்கூற்றத்து காமரவல்லி; - வளநாட்டு அண்டாட்டுக்கூற்றத்துத் தொழூர்,பராந்தக சதுர்வேதிமங்கலம், - வளநாட்டு இன்னம்பர் நாட்டு ஆதனூர், பழைய வானவன் மாதேவி சதுர்வேதிமங்கலம், அசுகூர்; - வளநாட்டு மிழலைநாட்டு சேய்ஞலூர், - வளநாட்டு |