27


மண்ணிநாட்டு     ஏமநல்லூராகிய  1    திரைலோக்கிய   மாதேவி
சதுர்வேதிமங்கலம்,   இடையர்    நல்லூர்,   இடவை:2  - வளநாட்டு
நல்லாற்றூர்நாட்டு கதவாய்மங்கலம், மகேந்திர கோட்டூர்;-வளநாட்டுக்
குறுக்கைநாட்டு  குறுக்கை,  காவிரிமங்கலம்,  கடலங்குடி; - வளநாட்டு
........   (நாடு   சிதைந்துபோய்விட்டது.)   திருநன்றியூர்3   மாற்பிடுகு
சதுர்வேதிமங்கலம்;     -     வளநாட்டு    வெண்ணையூர்நாட்டுப்
பெருங்கண்பூர், பாப்பாக்குடி;  -  வளநாட்டுத்   திருக்கழுமலநாட்டுக்
கழுமலம், தேனூர் ; - வளநாட்டு நாங்கூர்நாட்டு நாங்கூர், குன்றம்; -
வளநாட்டுக் கொண்டநாட்டுப் பஞ்சவன் மாதேவி சதுர்வேதிமங்கலம்; 
- வளநாட்டு   நெலுவூர்  நாட்டுக்  குமராதித்த  சதுர்வேதிமங்கலம்; 
-வளநாட்டுப்  பிடவூர்   நாட்டு  நயத்திரமங்கலம்,   க்ஷத்திரியசிங்க
சதுர்வேதிமங்கலம்;

5.  இராசாசிரியவளநாட்டு வடவழி  நாட்டுத்  திருவெள்ளறை; -
வளநாட்டுக் கலார்க்கூற்றத்துப் பராந்தக சோழ சதுர்வேதி மங்கலம்;

6.  கேரளாத்தகவளநாட்டு, உறையூர்க்  கூற்றத்து    இராசாசிரிய
சதுர்வேதிமங்கலம்.  அறிஞ்சிகை   சதுர்வேதிமங்கலம்;  -  வளநாட்டு
தட்டைக்களநாட்டுக் கற்றளி சதுர்வேதிமங்கலம்;- வளநாட்டுச் சூரலூர்
கூற்றறத்துச் சோழ உத்தம சதுர்வேதிமங்கலம்;

7.  பாண்டிகுலாசனிவளநாட்டு,விளாநாட்டு மலரியாகிய ஸ்ரீ கண்ட
சதுர்வேதிமங்கலம்;  -  வளநாட்டு  இடையாற்றுநாட்டு  இடையாற்று
சதுர்வேதிமங்கலம்;  தொண்டவை   சதுர்வேதிமங்கலம் -  வளநாட்டு எயிநாட்டுத் திருப்பேரூர்;

8.  நித்தவினோதவளநாட்டு  இராசகேசரி  சதுர்வேதிமங்கலம், -
- வளநாட்டு  ஆவூர்க்கூற்றத்து இரும்புதலாகிய  மனுகுல சூளாமணி
சதுர்வேதிமங்கலம்,  அமுத்திரவல்லி, -  வளநாட்டு முடிச்சோணாட்டு
ஜனநாத  சதுர்வேதிமங்கலம்;  -  வளநாட்டு  வெண்ணிக்கூற்றத்துக்
கீழ்ப்பூண்டியாகிய  ஓலோகமாதேவி  சதுர்வேதிமங்கலம், பூவனூராகிய
அவனிகேசரி சதுர்வேதிமங்கலம் என்னும்  ஊர்களிலுள்ள சபையார்கள்
ஆவர்.


1. ஏமநல்லூர்.  இது  ஒரு வைப்புத்தலம். எச்சில் இளமர் ஏமநல்லூர்
என்பது அப்பர் தேவாரம்.  
   2. இடவை.   இது  ஒரு  வைப்புத்தலம்.  இடையர்நல்லூர்  வேறு,
இடவை வேறு.  

   3. திருநின்றியூர் என்றிருக்கவேண்டும்.